தாம் செய்யும் வேலையைக் காதலிக்க மட்டுமே தமக்கு நேரம் இருப்பதாகச் சொல்கி றார் நடிகை ரெஜினா. ஒருவேளை தமக்கு யார் மீதாவது காதல் ஏற்பட்டால் அது குறித்து வெளிப்படையாகத் தெரிவிப்பதில் தயக்கம் ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளார். ரெஜினாவும் தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜும் காதலிப்பதாக அண்மையில் செய்தி வெளியானது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று இவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் தாம் காதல் வயப்பட்டு இருப்பதாக வெளி யான தகவலை ரெஜினா மறுத்துள்ளார். "நானும் சாய் தரம் தேஜும் காதலிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. அதில் உண்மை இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஆதாரமற்ற வதந்தி. "என் வாழ்வில் தற்போதுள்ள ஒரே காதல் என் வேலைதான். அதைத் தவிர வேறு எந்த காதலும் இல்லை. நான் காதலித்தால் அதை உங்களிடம் தெரிவிப்பேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு நன்றி," என விளக்கம் அளித்துள்ளார் ரெஜினா.
ரெஜினா: காதலிக்க நேரமில்லை
1 mins read
-

