கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் மே மாதம் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பல்வேறு சிக்கல்களால் இப்படம் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தன. அண்மையில் படம் பார்த்த தணிக்கைக் குழுவினர் யூ/ஏ சான்றிதழ் அளித்ததாகத் தகவல் வெளியாகியது. இந்நிலையில் படத்தின் முன்னோட்டக் காட்சிகள் விரைவில் வெளியாகும் என்றும் மே மாத இறுதிக்குள் படம் திரைகாணும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மே மாத இறுதிக்குள் வெளியாகிறது 'எனை நோக்கிப் பாயும் தோட்டா'
1 mins read
-

