இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராக இருந்த சஞ்சய் பாரதி இயக்குநராக அறிமுகமாகும் படம் 'தனுசு ராசி நேயர்களே'. காதலும் நகைச்சுவையும் கலந்த இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கிறார். 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்' படத்தை தொடர்ந்து ஹரிஷ் நடிக்கும் படம் இது. ஓர் இளைஞனின் ஜோதிட நம்பிக்கைகள் பற்றி இந்தப் படம் பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் அந்த இளைஞனுக்கு இந்த நம்பிக்கைகள் என் னென்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதே படத்தின் கதையாக சித்திரிக்கப்பட்டுள்ளதாம்.
ஜோதிட நம்பிக்கை குறித்து பேசும் 'தனுசு ராசி நேயர்களே'
1 mins read
ஹரிஷ் -

