சுடச் சுடச் செய்திகள்

இது வெற்றியின் ஆட்டம்

‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’ ஆகிய படங்களை இயக்கிய முத்தையா, தற்போது இயக்கும் படம் ‘தேவராட்டம்’. கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் ஜோடி சேர்ந்துள்ளனர்.
அக்கா, தம்பி, மாமா போன்ற உறவு களை மையமாக வைத்து உருவாகிறது இப்படம். இதுவரை நகரத்து இளைஞராக நடித்துக் கொண்டிருந்த கவுதம் கார்த்திக்கை இந்தப் படத்தில் வித்தியாச மான கோணத்தில் காட்டப் போகிறாராம் இயக்குநர்.
“என்னதான் நகரத்து இளைஞராக அதிக படங் களில் நடித்திருந்தாலும், கவுதமுக்கான ரசிகர்கள் கிராமப்புறங்களில் தான் அதிகம் உள்ள னர். மேலும் நகர்ப் புறங்களைக் கதைக் களமாகக் கொண் டுள்ள படங்களில் மட்டுமே கௌதமை அதிகம் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு ‘தேவராட்டம்’ வித்தி யாசமான அனு பவத்தைத் தரும்.
“கார்த்தி, விஷால், சசிகுமார் என பல நாயகர்க ளுடன் பணியாற்றி உள்ளேன். அவர் கள் அனைவருமே ரசிகர்கள் மத்தி யில் நாயகர்க ளாகப் பதிவா னார்கள். எனவே கௌதம் போன்ற வளர்ந்து வரும் இளம் நாயகனுக்கு வித்தியாசமான கதைக்களம் அமைவது மிக முக்கியம். அதை மன திற்கொண்டே நான் உருவாக்கிய கதைக்களத்தில் கௌதமை நடிக்க வைக்கிறேன்,” என்கிறார் இயக்கு நர் முத்தையா.
‘தேவராட்டம்’ வெளியான பிறகு கௌதமுக்கும் மக்கள் மனதில் தனி இடம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புவதாகக் குறிப்பிடுபவர், கவுத முக்கு ஏற்ற கதைக்களம் கச்சிதமாக அமைந்தது அவரை விட தமக்குத் திருப்தி அளிப்பதாகச் சொல்கிறார்.
“கௌதமை பொறுத்தவரை தனது தந்தையைப் போன்றே திறமை வாய்ந்த நடிகர். நல்ல கதைக் களம் அமையும் பட்சத்தில் அவரது முழுத்திற மையும் வெளிப்படும். தமிழ் சினிமா அத்தகைய வாய்ப்புகளை அளிக்கவில்லை என்றே நினைக் கிறேன். 
“இந்நிலையில் எனது இயக்கத்தில் அவரது நடிப்புக்கு தீனி போடும் வகையில் கதைக்களம் அமைந்திருப்பது தனிப்பட்ட வகையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,” என்கிறார் முத்தையா.
“படம் குறித்து கவுதம் என்ன நினைக்கிறார்?”
“தவறு நடப்பதைப் பார்த்து ஒதுங்காமல், அதை தட்டிக் கேட்கும் இளைஞனின் கதை இது. இன்றைய இளையர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் வகையில் நாயகனின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
“வெற்றிக்கான ஆட்டத்தைத் ‘தேவராட்டம்’ என்பார்கள். படத்தில் நாயகனின் பெயர் வெற்றி. அந்த வெற்றியின் ஆட்டம்தான் ‘தேவராட்டம்’. இதை ஒரு சமுதாய ரீதியான தலைப்பாகப் பார்க்கத் தேவையில்லை. வெற்றியின் ஆட்டம் என்பதை மனதிற்கொண்டே இப்படி ஒரு தலைப்பை இயக்குநர் தேர்வு செய்துள்ளார்,” என்கிறார் கவுதம் கார்த்திக்.
படத்தின் நாயகி மஞ்சிமா மிகுந்த உற்சா கத்துடன் நடித்தாராம். வித்தியாசமான கதையில் நடிப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார் மஞ்சிமா.
“ஏற்கெனவே ‘கொடி வீரன்’ படத்தில் நடிக்கக் கேட்டு இயக்குநர் முத்தையா என்னை அணுகினார். அப்போது ‘இப்படை வெல்லும்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் தேடிவந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“இந்தப் படத்தில் நடுத்தர வர்க்கத்துப் பெண்ணாக நடித்துள்ளேன். இயக்குநர் கதையை விவரித்த போதே மனதை வெகுவாகக் கவர்ந்தது. என்னால் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்த முடியுமா என்று தொடக்கத்தில் யோசித்தாராம். ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட நான் சிறப்பாக நடித்திருப்பதாக பிறகு பாராட்டினார்,” என்கிறார் மஞ்சிமா மோகன்.2019-04-10 06:10:00 +0800

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon