சைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் 'நிக்கிரகன்'. நஸ்ரேன் சாம் எழுதி இயக்கும் படம் இது. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மும்மொழிகளில் தயாராகிறது. பிரசாந்த் தாவீத், கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள் ளனர். "இரு கல்லூரி மாணவர்கள், பகுதி நேர வேலையாக தனியார் வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்று கிறார்கள். அவர்கள் வழங்கும் ஒரு புதுமையான, கலகலப்பான நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்கின்றனர். "பின்னர் அதையே முழுநேர வேலையாகவும் மாற்றிக் கொண்டுவிட, வேடிக்கையாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை, அவர்களே அறியாத வண்ணம் திடீரென தடம் மாறு கிறது. அதன் பின்னர் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே இந் தப் படம்," என்கிறார் இயக்குநர் நஸ்ரேன் சாம். கதைப்படி இளையர்கள் இரு வரும் இணையத்தின் வாயிலாக கிடைக்கும் தொடர்புகளால் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார் கள். அதிலிருந்து எப்படி மீள் கிறார்கள் என்பதை சுவாரசிய மாகச் சொல்லப் போகிறார்களாம். "நம் அன்றாட வாழ்வில் கடந்து வருகின்ற, சற்றே முக் கியத்துவமற்ற நிகழ்வுகள் போல தோன்றும் ஒரு விஷயம், ஒரு மனிதனின் வாழ்கையையே மாற் றிப் போடும் வல்லமை படைத்தது. அதை ஜனரஞ்சகமான காட்சி அமைப்புகளுடன், சரி விகிதத்தில் திகிலும் கலந்து இப்படத்தில் விவரிக்கிறோம். "இணையத்தால் இன்று நாம் பல வகையிலும் பயனடைகிறோம். அதே சமயம் இணையத்தில் பல் வேறு ஆபத்துகளும் ஒளிந்துள் ளன. இதை அறியாமல் செயல் பட்டோமெனில் அந்த ஆபத்து களில் நாம் சிக்கிக்கொள்வோம் என்பதை இப்படம் உணர்த்தும்," என்கிறார் நஸ்ரேன் சாம்.
இணையத்தில் ஒளிந்துள்ள ஆபத்துகள்
2 mins read
-

