'மிஸ்டர்.லோக்கல்': சிவாவை திருப்திப்படுத்திய கதை படமாகிறது

'மிஸ்டர்.லோக்கல்': சிவாவை திருப்திப்படுத்திய கதை படமாகிறது

1 mins read
292ee0f7-761d-4ac0-8e35-e577c53f9233
-

சிவகார்த்திகேயன், நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்கும் படம் 'மிஸ்டர்.லோக்கல்'. எம்.ராஜேஷ் இயக்குகிறார். இந்தப் படத்தின் கதைச் சுருக்கத்தை முன் எப்போதோ ஒருமுறை சிவகார்த்திகேயனிடம் மேலோட்டமாகச் சொல்லி இருந்தாராம். கதை தமக்குப் பிடித்திருப்பதாக சிவாவும் கூறியுள்ளார். ஆனால் அதன் பிறகு இருவருமே இது குறித்து பேசவில்லை. "இந்நிலையில் முழுக் கதை, திரைக்கதையையும் தயார் செய்தேன். மீண்டும் சிவாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது அவரிடம் இரண்டையும் விவரித்தேன். அவர் மிகவும் திருப்தியாக இருப்பதாகக் கூறினார். "எனவே சிவா ரசிகர்களையும் இந்தப் படம் திருப்திப்படுத்தும்," என்கிறார் இயக்குநர் ராஜேஷ். இவரது படங்களில் எப்போதுமே நகைச்சுவை சற்று தூக்கலாக இருக்கும். அதே போல் மிஸ்டர்.லோக்கல் படத்திலும் நகைச்சுவைக்கு குறைவிருக்கா தாம். சிவாவுடன் இணைந்து பணியாற்றுவது உற்சாகத்தை அளிப்பதாகவும், இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என நம்புவதாகவும் சொல்கிறார் எம்.ராஜேஷ்.