தனது கனவுப்படைப்பாக 'பொன்னியின் செல்வன்' படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் மணிரத்னம். இதில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரையும், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என பாலிவுட் கலைஞர்களையும் வைத்து இப்படத்தை மணிரத்னம் உருவாக்கப் போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து தயாரிப்புப் பணிகளை அவர் தொடங்கி உள்ளார். பெரும் பொருட்செலவில் இப்படத்தை உருவாக்க உள்ளனர். 'பொன்னியின் செல்வன்' கதையில் முக்கிய கதாபாத்திரங்களான அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், சுந்தர சோழராக அமிதாப் பச்சனும், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்க உள்ளனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ள நிலையில், பூங்குழலியாக நயன்தாரா நடிப்பதாகத் தெரிகிறது. 'பொன்னியின் செல்வன்' கதையில் பூங்குழலி கதாபாத்திரம் மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
பூங்குழலி வேடத்தில் நயன்தாரா
1 mins read
-

