தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஜினி நடிக்கும் புதுப்படம் 'தர்பார்'

1 mins read
70ea0b4a-5384-4d45-93b2-5ccf544efdbf
-

ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு 'தர்பார்' என தலைப்பு வைத்துள்ளனர். இதன் முதல்தோற்ற சுவரொட்டி நேற்று காலை வெளியானதை அடுத்து ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ரஜினியின் 167ஆவது படமாக 'தர்பார்' உருவாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதில் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இன்று தொடங்குகிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்து தகவல் விரைவில் வெளியிடப்படும் என படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இப்படத்தில் நிவேதா தாமஸ் ரஜினி மகளாக நடிக்கிறார் என்றும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாகவும் வெளியான தகவலை தயாரிப்புத் தரப்பு மறுத்துள்ளது.