விஜய் சேதுபதியை பாராட்டும் சேரன்

விஜய் சேதுபதி தமிழ்ச் சினிமா உலகுக்குக் கிடைத்த இன்னொரு சிவாஜி என்று பாராட்டியுள்ளார் இயக்குநர் சேரன்.
அண்மையில் சேதுபதி நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தைப் பார்த்தாராம். அதில் சேதுபதி உள்ளிட்ட அனைவரது நடிப்பும் தம்மை அசர வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. சேதுபதியின் ரசிகர் கள் இந்தப் படத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் வசூல் சொல்லிக் கொள்ளுப்படியாக இல்லை என்றும் ஒரு பேச்சு இருக்கிறது. 
ஆனால் விஜய் சேதுபதி இது குறித்தெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை. 
இந்நிலையில் ‘சூப்பர் டீலக்ஸ்’ பார்த்துவிட்டு இயக்குநர் சேரன் தமது கருத்துக்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“வாழ்க்கை பற்றி, சாமி பற்றி எது நல்லது, எது கெட்டது, யார் நல்லவர், யார் கெட்டவர் என நிறைய கேள்விகள் அவ்வப்போது நமக்குத் தோன்றும். அவற்றைத் தான் இப்படமும் கேட்கிறது. உள்ளூர ஆயிரம் வக்கிரங்களை அடக்கி வைத்திருக்கும் நம் முகம் காட்டுகிறது. கூவம் நம்மைச்சுற்றி ஓட வில்லை. நம்முள் தான் ஓடுகிறது,” என்று சேரன் தெரிவித்துள்ளார்.
அரவாணியாக நடிக்க சம்மதித்ததற்காகவும், அவர்களின் மறைக்கப்பட்ட தோற்றத்தை அப்படியே திரையில் தோன்றி ரசிகர்களின் கண்முன் கொண்டு வந்ததற்காகவும், கச்சிதமான ஒப்பனைக்காகவும் படக்குழுவினரையும், விஜய் சேதுபதியையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார் சேரன்.
“தனக்குள்ள மதிப்பு, மரியாதைக்கு சேதம் ஏற்படுமோ என்று கவலைப்படாமல் தன் தொழில் திறமை மீது மட்டும் நம்பிக்கை வைத்த அந்த நடி கன். விஜய்சேதுபதிக்கு ஒரு சல்யூட். அவர் இன்னொரு சிவாஜி.
“ஆபாச வார்த்தைகள், காட்சிகள் இருந்தாலும் முற்றிலும் புறந்தள்ள முடியாத சினிமாதான் ‘சூப்பர் டீலக்ஸ்’. காட்சி வடிவமைப்பு, ஒளிப்பதிவு, தேர்ந்தெடுத்த பகுதிகள், நடிகர் நடிகைகளின் தேர்வு நடிப்பு என இயக்கு நரின் உழைப்பு அபாரமாகத் தெரிகிறது.
“அடுத்த ஐந்து ஆண்டு களில் இது போன்ற திரைப் படங்கள் அதிகம் வெளி வரும்,” என்று இயக்குநர் சேரன் தமது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon