சுடச் சுடச் செய்திகள்

போலிஸ் வேடத்தில் ஆன்ட்ரியா

‘மாளிகை’ என்ற படத்தில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ஆன்ட்ரியா. ‘தில்’ சத்யா இயக்கும் இந்தப் படத்தில் போலிஸ், இளவரசி என இரு மாறுபட்ட கதாபாத்திரங்கள் ஆன்ட்ரியாவுக்கு வாய்த்திருக்கின்றன.
இது அடிதடி, கற்பனை மற்றும் திகில் நிறைந்த படமாக இருக்குமாம். இளவரசி கதாபாத்திரம் வரும் பகுதி மட்டும் ஒரு மணி நேரத்துக்கு மேல் இருக்குமாம். இதற்காக 400 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவங்களைச் சித்திரித்துள்ளார் இயக்குநர்.
ஒரு குறிப்பிட்ட விசாரணைக்காக அரண்மனை ஒன்றுக்குச் செல்லும் ஆன்ட்ரியாவுக்கு, தனது கடந்த காலத்துக்கும் அந்த அரண்மனைக்கும் இடையே ஏதோ தொடர்பு இருப்பதாக உணர்கிறார். இதையடுத்து அவர் மேற்கொள்ளும் விசாரணையின் தொகுப்பாக இப்படம் உருவாகிறதாம்.
கன்னட நடிகர் கார்த்திக் ஜெயராம் ஆன்ட்ரியாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon