மே 10ஆம் தேதி வெளியீடு காண்கிறது விஷாலின் 'அயோக்யா'

மே 10ஆம் தேதி வெளியீடு காண்கிறது விஷாலின் 'அயோக்யா'

1 mins read
9a30e436-6ff6-427a-b88b-9012b028f59d
விஷால், ரா‌ஷி கண்ணா -

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ரா‌ஷி கண்ணா ஜோடி சேர்ந்துள்ள படம் 'அயோக்யா'. இப்படத்தை எதிர்வரும் மே 10ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, சோனியா அகர்வால், சச்சு ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். முன்னதாக இப்படத்தை எதிர்வரும் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் சிறு தாமதத்துக்குப் பின்னர் வெளியீடு கண்டாலும், 'அயோக்யா'வின் வசூல் நிச்சயம் அதிகமாக இருக்கும் என நம்புகிறேன் என்கிறார் இயக்குநர் வெங்கட் மோகன். இப்படத்தில் அனைத்து அம்சங்களும் இருக்கும் என்றும் இயக்குநர் தரப்பில் உறுதியளிக்கப்படுகிறது.