சுடச் சுடச் செய்திகள்

கடும் உடற்பயிற்சி செய்யும் நாயகி அனுபமா

உடல் பெருத்திருப்பதால் உங்களுக்கு வாய்ப்பு கிடைப்ப தில்லை என்று ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டதை அடுத்து அண்மைக் காலமாக உடற்பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் இளம் நாயகி அனுபமா. தினமும் காலையிலேயே உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று விடுகிறாராம். சுமார் 7 மணிக்கு அங்கு சென்றால், மதியம் ஒரு மணி வரை இடைவிடாமல் பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார். அப்போது உணவு, தண்ணீர் என எதுவுமே கிடையாதாம். இதன் மூலம் அடுத்த சில தினங்களில் இளவயது சிம்ரனுக்கு இணையாக மாறிவிட முடியும் என்பது அனுபமாவின் நம்பிக்கை. ஆனால் ஒருசில ரசிகர்களோ நீங்கள் உடல் பெருத்திருந்தால் தான் அழகாக இருக்கிறீர்கள். ஒல்லியாக மாறினால் உங்களுக்கென உள்ள கவர்ச்சி போய்விடும் என்றும் தங்கள் பதிவில் புலம்பி உள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon