திரிஷா நடிக்கும் புதுப் படத்துக்கு கதை எழுதுகிறார் இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தை அவரிடம் உதவியாளராகப் பணியாற்றிய சரவணன் இயக்குகிறார். இது அதிரடியும் திகிலும் கலந்த படமாக உருவாகிறது. லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்துக்காக சிறப்பு சண்டைப் பயிற்சி பெற்று வருகிறாராம் திரிஷா. 'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சரவணன், விபத்து ஒன்றில் சிக்கியதால் சில காலம் ஓய்வில் இருந்தார். மீண்டும் படம் இயக்கும் அவருக்கு கைகொடுக்கும் வகையில் இப்படத்துக்காக கதை எழுத ஒப்புக் கொண்டாராம் முருகதாஸ்.
திரிஷாவுக்கு கதையெழுதும் முருகதாஸ்
1 mins read
-

