தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடிப்பில் உருவாகி உள்ள படம் 'தேவதாஸ்'. இதில் நாயகனுக்குரிய முக்கியத்துவத் துடன் உமாபதியுடன் இணைந்து நடித்துள்ளார் யோகிபாபு. இரா மகேஷ் இயக்கி உள்ளார். "மனித வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் இரண்டற கலந்தது என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய மகிழச்சியும் மிகப்பெரிய துக்க மும் ஒரே நேரத்தில் நடந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்? "இந்த கற்பனைக்குப் பதில் தரும் விதமாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இந்த உணர்வுப்பூர்வமான கதையை நகைச்சுவை கலந்து, ஜனரஞ்ச கமாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறோம். ஒவ்வொரு காட்சியும் கலகலப்பாக நகரும்," என்கிறார் இயக்குநர் மகேஷ். படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும், தங்கள் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் தாங்கள் எதிர்கொண்ட, அனுபவித்த விஷ யங்களை நினைவுகூரும் வகை யில் திரைக்கதை அமைத்துள்ள னராம். மனிஷா யாதவ், 'சகா' ஐரா ஆகிய இருவரும் நாயகி களாக நடித்துள்ளனர். ஏற்கெனவே 'அதாக்கப்பட்டது மகா ஜனங்களே', 'மணியார் குடும்பம்', 'திருமணம்' ஆகிய படங்களில் உமாபதி ராமையா, யோகிபாபு கூட்டணி ரசிகர்களை நன்றாக சிரிக்க வைத்தது. மீண் டும் இணைந்துள்ள இருவரும் இந்தப் படத்திலும் நகைச்சுவையில் அசத்தியுள்ளனராம்.
தேவதாஸ்: மீண்டும் இணைந்த கூட்டணி
1 mins read
-

