அமெரிக்காவில் கணினித் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வரும் இளையர்கள் பலரும் இணைந்து தயாரித்துள்ள படம் 'வெள்ளைப் பூக்கள்'. இன்டஸ் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் விவேக், சார்லி, தேவ், ஹாலிவுட் நடிகை பெய்ஜ் ஹெண்டர்சன், பூஜா தேவரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழக காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் அமெரிக்காவில் உள்ள தனது மகன், மருமகளுடன் ஓய்வுக் காலத்தைச் செலவிடச்செல்கிறார். தொடக்கத்தில் எல்லாமே இனிமையாக அமைய, பின்னர் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவருக்கு அறிமுகமான சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கின்றனர். அதற்கான காரணத்தை அவர் கண்டுபிடித்தாரா என்பதுதான் இப்படத்தின் கதையாம்.
வெள்ளைப் பூக்கள்: காவல்துறை அதிகாரி சந்திக்கும் சிக்கல்கள்
1 mins read
'வெள்ளைப் பூக்கள்' படத்தில் விவேக், சார்லி, தேவ், ஹாலிவுட் நடிகை பெய்ஜ் ஹெண்டர்சன், பூஜா தேவரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். -

