சித்திரைப் புத்தாண்டில் சூர்யா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

சித்திரைப் புத்தாண்டில் சூர்யா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

1 mins read
9c216727-94c3-40b9-a140-f558439036e5
-

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய 'என்ஜிகே' படத்தின் 'தண்டல்காரன்' பாடல் நேற்று ஏப்ரல் 12ல் வெளியான நிலையில், சூர்யாவின் 'காப்பான்' பட தக வல் ஒன்றும் இப்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குநர் கே.வி. ஆனந்த் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் சூர்யாவின் ரசிகர்களுக்கு ஒரு விருந்து நிச்சயம். "அனேகமாக 'காப்பான்' பட டீசர் அல்லது ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளி யாக வாய்ப்புள்ளது. எனவே இந்தப் புத் தாண்டில் 'என்ஜிகே', 'காப்பான்' என இரட்டை விருந்து சூர்யா ரசிகர்களுக்குக் காத்திருப்பது உறுதி," எனத் தெரிவித் துள்ளார். சூர்யாவின் 'என்ஜிகே' வரும் மே 31ஆம் தேதி வெளியீடாக உள்ள நிலையில் 'காப்பான்' படத்தின் வெளியீட்டு தேதி தகவலும் விரைவில் வெளிவரவுள்ளது. இதற்கிடையே, கதாபாத்திரங்களுக்கு ஏற்ப 'கஜினி' படத்துக்காக மொட்டை போட்டு நடித்த சூர்யா, 'பேரழகன்' படத் துக்காக எடுப்பான பல் வைத்துக்கொண்டு கூன் விழுந்த மாற்றுத் திறனாளியாக நடித்தார். '7ம் அறிவு' படத்திற்காக 'சிக்ஸ்பேக்' வைத்தார். தற்போது புதிய படத்துக்காக வழுக்கைத் தலையுடன் நடிக்கவுள்ளார். 'இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கோங்கரா இயக்கத்தில் தொழில் அதிபர் ஒருவரின் வாழ்க்கையைத் தழுவி உரு வாகும் இப்படத்தில் தொழிலதிபராக வழுக்கைத் தலை தோற்றத்தில் நடிக்க சம்மதித் துள்ளாராம் சூர்யா.