ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பதுபோல் நடிகை காஜல் அகர்வாலும் தள்ளுபடி வழங்க ஆரம்பித்துள்ளார். கைவசம் அவருக்கு இப்போது அதிக அளவில் படங்கள் இல் லாத நிலையில் ஓரிரு படங் களையே வைத்துள்ளார். இதன் காரணமாக புத்திசாலித்தனமாக இந்த புது முடிவை எடுத்திருக் கிறாராம். காஜல் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறார். அவரை ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்கள் சம்பளத் தில் தள்ளுபடி கொடுங்கள் என்று கேட்டால் அவர்களுக்கு ஒரு 'ஆஃபர்' தருகிறார். அதா வது ஒரு படத்தில் நடிக்க ஒப் பந்தம் போடும் அதேசமயத்தில் மற்றொரு படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தம் போடவேண்டும். ஒரே நேரத்தில் இரு படங்களில் நடிப்பதற்கு ஒப் பந்தம் செய்தால் சம்பளத் தள்ளு படி நிச்சயம் என்கிறாராம் காஜல்.
இரு பட வாய்ப்பு; தள்ளுபடி கடைவிரித்துள்ள காஜல்
1 mins read
-

