சுடச் சுடச் செய்திகள்

பல்லவி: உலக அழகியே என் நாட்டியத்தின் குரு  

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் பிறந்தவரான சாய் பல்லவி நடனத்தில் சும்மா பம்பரமாக சுழன்றாடுகிறார். ‘மாரி 2’ படத்தில் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு அவர் ரப்பர் போன்ற உடல்வாகுடன் கொடுத்துள்ள ஒவ் வொரு நடன அசைவும் ஆச்சரியமூட்டும் அளவுக்கு மிகவும் சிறப்பாக அமைந்து கோடிக்கணக்கான மக்களை ரசித்துப் பாராட்டும்படி செய்துள்ளது.  
இந்த பாராட்டுகள் அனைத்தும் தனக்கு நடன குரு போல் விளங்கிய பாலிவுட் பிரபல நடிகைகள்  மாதுரி தீட்சித்தையும் உலக அழகி ஐஸ்வர்யா ராயை யுமே சேரும் என்று சாய்பல்லவி கூறியுள்ளார்.  
“நடனம் கற்பதற்காக நான் எந்த ஒரு நடன ஆசிரியரையும் அணுகவில்லை. மாறாக உலக அழகி ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சித் ஆகியோரின் நட னக் காணொளிகளைப் பார்த்தே நடனத் திறனை மெருகேற்றிக் கொண்டேன்,” என்று கூறி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.  
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும்  நடித்துவரும் சாய் பல்லவி தனக்கு கவர்ச்சியாக நடிப் பது பிடிக்காது என்றும் தெரிவித்துள்ளார். 
“என்னுடைய அம்மா, அப்பா எனது மகிழ்ச்சிக் காக என்னை நடிக்க அனு மதித்து உள்ளார்கள். அவர்கள் மனம் நோகும் படி  எந்த ஒரு காரியத்தை யும் செய்யமாட் டேன்,” என்கிறார்            சாய் பல்லவி. 
“நடிகை என்று சொல்வதை விடவும் மருத்துவர் என்று சொல் லும்போது எனக்கு அதிக ஆத்மதிருப்தி கிடைக்கிறது. ஒருவரை குணப்படுத்துவது மட்டுமின்றி, நோயே வராமல் தடுக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை,” என்று மருத்துவரான சாய் பல்லவி விருப்பம் தெரிவித்துள்ளார்.
மலையாளத் திரைப்படமான ‘பிரேமம்’ படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு முன்பாகவே பிரசன்னா, மீரா ஜாஸ்மின் நடித்த ‘கஸ்தூரி மான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம்தூம்’ படத்தில் ஒரு சிறிய கதா பாத்திரத்திலும் நடித்திருக்கிறார் சாய் பல்லவி.  
 ‘பிரேமம்’ திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் வரிசையாகப் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. 
ஆனால்,  எதிலும் ஒப்பந்தம் ஆகாமல் மருத்துவம் படிக்க ஜார்ஜியா சென்றார் சாய் பல்லவி. 
படிப்பை முடித்தபிறகே மீண்டும் திரையுலகில்  நுழைந்தார். 
அவரது வீட்டில் ‘டாக்டர். சாய் பல்லவி செந்தா மரை’ என்ற பெயர் பலகையை  மாட்டி வைத் திருக்கிறார்.
மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் ‘கலி’ படத்தில் நடித்த சாய் பல்லவி, அதற்குப்பிறகு மூன்று ஆண்டுகளாக எந்த மலையாளப் படத்திலும் நடிக்காமல் இருந்தார். 
இப்போது பகத் ஃபாசில் ஜோடியாக ‘அதிரன்’ என்ற மலை யாளப் படத்தில் நடித்துக்கொண் டிருக்கிறார். அறிமுக இயக்குநர் விவேக் இயக்கிக்கொண் டிருக்கும் இந்தப் படம் ‘சைக்காலஜிகல் த்ரில்லர்’ படமாக உருவாகிறது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon