விரைவில் இயக்குநர் விவேக்

விரைவில் இயக்குநர் விவேக்

2 mins read
b70ac201-ccf0-4bae-9825-a2604bd626af
-

பல படங்களில் நகைச்சுவைக்காக போலிஸ் கதாபாத்திரம் ஏற்று நடித்த விவேக், 'வெள்ளைப் பூக்கள்' படத்தில் துப்பறியும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். 'சால்ட் அண்ட் பெப்பர்' தோற்றத்தில் ஆச்சரியப்படுத்தும் அவருடன் தமிழக ஊடகம் ஒன்று நேர்காணல் நடத்தியது. அப்போது பேசிய விவேக், "இயக்குநருடைய பெயரும் விவேக்தான். அவர் முடிவு செய்த தோற்றம் இது. "காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி நான். ஆனா லும் காவல்துறையினர் அவ்வப் போது அழைத்து, தீர்க்க முடியாத சில வழக்குகளுக்கு தீர்வு காணும் படி கேட்கிறது. "தமிழகக் காவல்துறையில் பணியாற்றிய கண்ணப்பனை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசாங்கம் கூப்பிட்டுப் பயன்படுத்திக்கொள்வார்கள். கிட்டத்தட்ட எனது கதாபாத்திரம் அப்படிப்பட்டதுதான். "இயக்குநரும் நல்ல ஆலோச னைகளை ஏற்றுக்கொள்ளும் பக்கு வத்துடன் இருந்ததால், எனது கதாபாத்திரம் குறித்த பல ஆலோச னைகளை ஏற்றுக்கொண்டு அதைத் திரைக்கதையில் பிரதி பலித்தார். "இப்படத்தில் எனக்கு நகைச் சுவைக்கு வேலை இல்லை. முழு வதையும் சார்லியின் தோளுக்கு நகர்த்திவிட்டோம். "இப்படம் வெளியான பிறகு, இதுபோன்ற கதைகளுக்கு இனித் தமிழ் சினிமாவில் அதிக இடம் உண்டு என்ற நிலையை உருவாக் கும் என்று நம்புகிறேன்," என்றார். தொடர்ந்து பேசிய அவரிடம் இயக்குநர் அவதாரம் எப்போது என்று கேட்டதற்கு, "எழுத்தாளர் சுஜாதா, மணிரத்னம், மம்மூட்டி ஆகியோர் திரைக்கதையைத் தாண்டியும் என்னால் எழுத முடி யும் என்று கூறியிருக்கிறார்கள். "தற்போது நடித்துக் கொண்டி ருக்கும் படங்களுக்கு நடுவே ஒரு திரைக்கதையையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். "அது முடியும்போது கண்டிப் பாக இயக்குநர் விவேக் குறித்த அறிவிப்பு இருக்கும்," என்றார். இப்படத்தின் இயக்குநர் விவேக் உள்ளிட்ட வெளிநாட்டு வாழ் இந்தியத் தமிழ் இளைஞர்கள் குழு இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.