ஹாலிவுட் படங்களைக் கைப்பற்ற தனிப்படை

ஹாலிவுட் படங்களைக் கைப்பற்ற தனிப்படை

1 mins read
558616fd-d694-4f0c-9486-6aa009e9ec72
ஐஸ்வர்யா ராய் -

மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அதே வேளை யில், ஐஸ்வர்யா ராய் ஹாலிவுட் படங்களில் நடிக்கவும் தீவிரமாக முயன்று வருகிறார். எனவே ஹாலிவுட் திரையுலகில் நிலவும் வாய்ப்புகளை அலசி, ஆராய்ந்து அவற்றைக் கைப்பற்ற ஐஸ்வர்யா ராய் தனிக்குழு ஒன்றை அமைத்து உள்ளதாகக் கூறப்படு கிறது. இந்நிலையில், 'பிங்க் பேந்தர்', 'பிரைட் அண்ட் பிரெஜுடிஸ்' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து 6வது ஹாலி வுட் படத்தில் நடிக்க கிட்டியுள்ள வாய்ப்பை அவர் பரிசீலித்து வருகிறார். இதுகுறித்து 'பிங்க்வில்லா' எனும் திரைத்துறை இணையத்தளம் வெளி யிட்டுள்ள செய்தி, "ஐஸ்வர்யா ராய் ஹாலிவுட்டில் நடிக்கும் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரு கின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியா கும்," என்கிறது. 1994ல் உலக அழகி பட்டம் சூடிய இவர், 1997ல் 'இருவர்' தமிழ்ப்படம் மூலம் திரைத்துறை யில் கால்பதித்தார்.