‘கோபப்பட்டாலும் ரசிப்பார்’

‘காஞ்சனா-3’ ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலை யில் இந்தப் படமும் பெரிய அளவில் வெற்றிபெறும் என்கிறார் ராகவா லாரன்ஸ். 
‘காஞ்சனா-2’ படத்தின் ஒட்டு மொத்த வசூல் 100 கோடி ரூபாயைக் கடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த முறை அதைவிட அதிக வசூ லைப் பெறவேண்டும் என்பதே இப்படக்குழுவின் இலக்காக உள்ளது. 
இந்த முறை வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி என படத்தில் மொத் தம் மூன்று நாயகி கள். மூவரில் வேதிகா குறித்துப் பேசும்போது, லாரன்ஸ் முகத் தில் கூடுதல் பாசம் தென் படுகிறது. 
ஏனெனில் சிறு வயதிலேயே இவருடன் இணைந்து நடித்துள்ளா ராம் வேதிகா. 
“சிறு வய திலேயே அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டேன். நடனத்தில் வேதி காவை யாரும் எந்தவகை யிலும் குறை சொல்லமுடியாது. அசத்தலாக ஆடுகிறாய் என்று நானே பலமுறை பாராட்டி இருக் கிறேன்.  
“இப்போது வளர்ந்து ஆளாகி, என் படத்தில் நடித் ததுடன் பாடல், உணர்வுபூர்வ மான காட்சிகள் குறித்து பல கேள்விகளை அவர் எழுப்பு வதைக் கேட்கும்போது ஆச்ச ரியமாக இருக்கிறது” என் கிறார் லாரன்ஸ். 
வேதிகாவும் இதேபோன்று ஆச்சரியத்தில் தான் உள்ளாராம். லாரன்சுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது தமது அதிர்ஷ்டம் என்கிறார். 
“படப்பிடிப்பில் நான் ஏதாவது கேள்வி எழுப்பினாலே போதும். இவ்வளவு விவரமான பெண்ணாகி விட்டாயே என்று லாரன்ஸ் மாஸ்டர் ஆச்சரியப்படுவார்.  சில சமயங்க  ளில் அவர் எதிர்பார்த்த  நடிப்பை வெளிப் படுத்தாவிட்டால் சற்றே கோபப்படுவார். அதேசமயம் நாம் கச்சிதமாக நடித்தால் அதை வெகுவாக ரசிப்பதுடன் உடனுக்குடன் பாராட்டுவார்,” என்கிறார் வேதிகா. 
இளம் நாயகி நிக்கி தம்போடிக்குத் தமிழில் இது அறிமுகப் படம். முதல் படத்தி லேயே நகைச்சுவையில் கலக்கி உள்ளாராம்.
“90 எம்எல்’ படத்தில் ஓவியாவின்  நடிப்பு அதிரடியாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பின்போது மிகவும் அமைதியாக இருப்பார். அவர் வருவதும் தெரியாது; எப்போது கிளம்பிச் செல்கிறார் என்பதும் தெரியாது. அவ்வளவு அமைதியான பெண். 
“இந்த மூன்று நாயகிகளுமே கவர்ச்சி, கதையில் உள்ள முக்கிய திருப்பங்களுக் காகத் தேவைப்படுகிறார்கள். இம்முறை சன் பிக்சர்ஸ் இப்படத்தை வெளியிட உள்ளனர். நான் ஒரு படத்தை சந்தைப்படுத்துவதற்கும் பெரிய நிறுவனம் வெளியிடுவதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. எனக்கு அவர்கள் கூடுதல் பலம்,” என்கிறார் லாரன்ஸ். 
ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், திரு நங்கைகளுக்கு நல உதவி என்று தொடர்ந்து தனது சமூகச் சேவையில் ஈடுபட்டு வரு பவர், அனைவரும் தங்களால் முடிந்த உதவி களை மற்றவர்களுக்குச் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறார். லாரன்சை பொறுத்த வரை அன்பைக் கொன்றால் அதுதான் அழிக்கமுடியாத அநீதியாம். 
“சிறு வயதில் நாம் கஷ்டத்தில் இருக் கும்போது பணக்காரர்கள் கோடிக்கணக்கில் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய் வார்கள் என்று யோசித்திருப்போம். அதே போல் நம்மிடம் பல கோடிகள் இருக்கும்போது கேள்விகள் எழும் அல்லவா? அதனால்தான்  கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் என சில கோடிகளை எடுத்துக்கொடுத்தேன். இதை பெரிய சாதனையாகவோ சேவையாகவோ கருதவில்லை,” என்கிறார் லாரன்ஸ்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்