ரகசிய திருமணம்: மேக்னா தகவல்

ரகசிய திருமணம்: மேக்னா தகவல்

1 mins read
35fe36fb-a287-450f-940e-578438adf71e
-

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் லூயிசை ரகசிய திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார் நடிகை மேக்னா நாயுடு. சிம்புவுடன் 'சரவணா', சரத்குமா ருடன் 'ஜாம்பவான்', 'வைத்தீஸ்வரன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மேக்னா நாயுடு, சில படங்களில் ஒற்றைப் பாடலுக்கு நடனமும் ஆடியுள் ளார். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த அவருக்கும் டென்னிஸ் வீரர் லூயிசுக்கும் சமூக வலைத்தளம் மூலம் நட்பு ஏற்பட்டதாம். "பின்னர் அது காதலாக மலர்ந்தது. 2016 டிசம்பரில் மும்பையில் இந்து முறைப்படி ரகசியத் திருமணம் செய்துகொண்டோம். அடுத் தாண்டு கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடக்கும். ரகசியமாக நடந்த திருமணம் குறித்து கணவரின் அனுமதியுடன் இப்போது அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளேன்," என்கிறார் மேக்னா நாயுடு.