‘பெற்ற தாயைப் போல் ஆதரவாக  இருந்தார்’

நகைச்சுவை நடிகைகளில் தனக் கென தனி இடத்தைப் பிடித் துள்ளார் மதுமிதா. 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தைப் பார்த்தவர் களுக்கு இவரை நன்கு தெரிந்திருக்கும்.
அண்மையில் திருமணம் செய்து கொண்டவர் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். முன்னாள் கதாநாயகி நளினியால் தான் தம்மால் வாழ்க்கையில் சில உயரங்களைத் தொடமுடிந்தது என்கிறார் மதுமிதா.
"ஒரு தொலைக்காட்சி தொட ரில் நடிக்கும்போதுதான் நளினி அம்மாவின் அறிமுகம் கிடைத்தது. முதல் சந்திப்பிலேயே என்னைப் பற்றி மிகவும் கரிசனத்துடன் விசாரித்தார்.
"நாளடைவில் ஓர் ஆசானாக என் இதயத்தில் இடம்பெற்று விட்டார். அவர்தான் சினிமா துறையில் எப்படி பழகவேண்டும், எப்படி பேசவேண்டும், உடைகள் எப்படி இருக்கவேண்டும், பிறரை எப்படி மதிக்கவேண்டும் என்று எல்லா பண்புகளையும் வளர்த்துக் கொள்ள உதவி செய்தார்," என் கிறார் மதுமிதா.
சொந்த வீடு வாங்கவேண்டும் என்று முயற்சி செய்தபோது நளினிதான் இவரை வழி நடத்தி னாராம். தனக்குத் தெரிந்த நகைக்கடைக்காரர் ஒருவரை அறிமுகப்படுத்தியதுடன் முன் பணம் கூட தராத நிலையில் சில பவுன் நகைகளை வாங்கித் தந்துள்ளார்.
அதற்குரிய தொகையை மாதத் தவணை முறையில் செலுத்தி னாராம் மது. சுமார் 7 ஆண்டுகள் இவ்வாறு சேர்த்த நகைகளை மொத்தமாக விற்று அதில் கிடைத்த தொகையைக் கொண்டு வீடு வாங்கினாராம்.
"இப்போது மதுமிதா என்றால் எல்லாருக்கும் தெரிகிறது. நளினி அம்மா என் வாழ்க்கையில் இடம் பெற்றிருக்கவில்லை என்றால் என் னால் இந்த உயரத்தைத் தொட் டிருக்கமுடியாது. ஒருவேளை அவரை நான் என் வாழ்க்கையில் சந்திக்காமலேயே இருந்திருந்தால் நடிப்பைத் தவிர்த்து, வேறெதுவும் விவரம் தெரியாதவளாகவே இருந் திருப்பேன்.
"சினிமாவுக்கு வந்த காலக்கட் டத்தில் இருந்து அண்மையில் நடைபெற்ற என்னுடைய திருமணம் வரை எல்லாமே நளினி அம்மாவின் வழிகாட்டுதல்படியே நடந்தது. எங்கள் இருவருக்குமிடையே அம்மாவுக்கும் மகளுக்குமான பந்தம், பாசம் இருந்தது. ஒரு தாய் தன் மகளுக்கு என்ன செய்வாரோ, அந்தளவுக்கு நளினி அம்மா என் வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்துள்ளார்.
"வாழ்க்கையில் சில சமயம் நான் துவண்டு போகும்போது என்னையும் அறியாமல் நான் அழைக்கும் தொலைபேசி எண் நளினி அம்மாவுடையதாகத்தான் இருக்கும். சோர்ந்து போகும் வேளையில் அவர் அளிக்கும் உற்சாகமான வார்த்தைகள் என் மனதுக்கு மருந்தாக அமைந்திருக் கிறது," என்று நெகிழ்கிறார் மதுமிதா.
தற்போது ஆறு படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர், குணச் சித்திர வேடங்களிலும் தம்மால் கச்சிதமான நடிப்பை வழங்கமுடி யும் என்கிறார்.
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும், எல்லோருக்கும் நல்லது செய்யவேண்டும், எல்லாம் நன் றாக நடக்கவேண்டும் என்பது தான் மதுவின் பிரார்த்தனையாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!