ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கடாரம் கொண்டான்' படத்தின் வெளியீட்டுத் தேதி தொடர்பாக நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. இப்படம் மே 31ஆம் தேதி வெளியீடு காணும் என்ற அறிவிப்புடன் அண்மையில் ஒரு சுவரொட்டி வெளியானது. ஆனால், அதே தேதியில் செல்வராகவன், சூர்யா கூட்டணியில் உருவாகி உள்ள 'என்ஜிகே' படம் வெளியாவதாக ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இதனால் சூர்யா ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் 'கடாரம் கொண்டான்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் படத்தின் வெளியீட்டுத் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அதன் தயாரிப்பு நிறுவனமான டிரைடன்ட் தெரிவித்துள்ளது. இப்படத்தில் அக்ஷரா ஹாசன், அபு ஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அநேகமாக ஜூன் மாத இறுதிக்குள் இப்படம் வெளியீடு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'கடாரம் கொண்டான்' பட வெளியீட்டுத் தேதி ஒத்திவைப்பு
1 mins read
-

