சமுத்திரக்கனி: நல்ல படைப்பாக உருவாகி உள்ளது 'பற'

சமுத்திரக்கனி: நல்ல படைப்பாக உருவாகி உள்ளது 'பற'

2 mins read
6ca38d84-52b9-46bf-98b5-f683e987baf0
-

'பற' படம் மிக அருமையான படைப்பாக உருவாகி இருப்பதாக நடிகரும் இயக்குநருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் தாம் நடித்ததற்கு இயக்குநர் ரஞ்சித் தான் காரணம் என்றும் அவர் கூறி யுள்ளார். 'பற' படத்தின் பாடல் வெளி யீட்டு விழா சென்னையில் நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சமுத்திரகனி எந்த உணர்ச்சி யையும் அதிகம் வெளிக்காட்டாத உண்மையாளர் ரஞ்சித் என்று குறிப்பிட்டார். "ரஞ்சித் தான் இந்தப் படத்தின் இயக்குநர் கீராவை அறிமுகப்படுத்தி னார். இதில் காதலர்களுக்குப் பாது காப்பு கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்றார் கீரா. அதைத்தானே நான் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறேன் என் றேன். இயக்குநர் கீராவிடம் நான் ரஞ் சித்தைப் பார்க்கிறேன். இருவரும் ஒரே மாதிரியான தன்மை கொண்டவர் கள். இது அற்புதமான படமாக, அரு மையான பதிவாக உருவாகி உள்ளது," என்றார் சமுத்திரகனி. இதையடுத்துப் பேசிய இயக்குநர் கீரா, ஒவ்வொரு மனிதனும் வாழும் போது துரோகமும் வன்மமும் இல் லாமல் வாழவேண்டும் என்றார். 'பற' படம் சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் படைப்பு என்றும் குறிப்பிட்டார். "இந்தப் படத்தின் இசையமைப்பாளர் இப்போது உயிருடன் இல்லை. அவ் வளவு குறைவாகத்தான் வாழ்நாள் இருக்கிறது. சாதி ஒழிப்பையும் ஆணவக் கொலைக்கான தீர்வையும் அண்ணன் சமுத்திரகனி ஏற்று நடித் துள்ள அம்பேத்கர் கதாபாத்திரம் மூலம் விரிவாகச் சொல்லியிருக்கி றோம். இது தரமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. உங் களுக்கும் அந்த எண்ணம் இருக்கும் என நம்புகிறேன்," என்றார் கீரா. இதையடுத்து பேசிய இயக்குநர் ரஞ்சித், திரையுலகில் பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவது உண்மைதான் என்றார். "இயக்குநர் கீரா அவரது கொள் கையை ஓங்கிப் பேசி வருகிறார். சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றிய ஆழமான புரிதலை இந்தப் படம் ஏற்படுத்தும் என நம்புகிறேன். இந்த மாதிரியான படங்கள் வெற்றிபெற வேண்டும். "அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் திரைத்துறையிலும் சாதி குறித்து விவாதிக்கவேண்டிய சூழலை உருவாக்கி இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. "பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாலேயே பெண்களைச் சிலர் குறை கூறுகிறார்கள். இத்தகைய போக்கு நல்லதல்ல," என்கிறார் இயக்குநர் ரஞ்சித்.