சங்கீதா: ஒரு தாய் இப்படி இருக்கக்கூடாது

சொத்துப் பிரச்சினை காரணமாக முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டதாக புகார் எழுப்பியுள்ள தனது தாய்க்கு சமூக வலைத்தளம் வழி பதிலடி கொடுத்துள்ளார் நடிகை சங்கீதா க்ரிஷ்.
'பிதாமகன்', 'மன்மதன் அம்பு' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சங்கீதா. பிரபல பின்னணி பாடகர் க்ரிஷ் இவரது கணவர் ஆவார்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார் சங்கீதா.
இந்நிலையில் சொத்துப் பிரச்சினை காரணமாக தம்மை வீட்டை விட்டு வெளியேற்றி முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டதாக சங்கீதா மீது அவரைப் பெற்ற தாயே குற்றம்சாட்டினார்.
இப்புகார் தொடர்பாக சங்கீதா மகளிர் ஆணை யத்தில் முன்னிலையாகி விளக்கம் அளித்துள்ளார்.
பதின்மூன்று வயதிலேயே தம்மை பள்ளியில் இருந்து நிறுத்தி, நடிக்க வைத்ததாகவும் தாம் சம்பாதித்த பணத்தை கண்டபடி செலவிட்டதாகவும் தன் தாய் மீது அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
"என்னை பெற்றெடுத்தமைக்கு நன்றி. வெற்று காசோலைகளில் கையெழுத்திட வைத்ததற்கும் வாழ்நாள் முழுவதும் எந்த வேலைக்கும் செல்லாமல் மதுவுக்கும் போதைக்கும் அடிமையான உங்க ளுடைய மகன்களின் சொகுசு வாழ்க்கைக்காக என்னை சுரண்டியதற்கும் நன்றி.
"தொடர்ந்து என் கணவரை பலவகையிலும் தொல்லைப்படுத்தி, என் குடும்ப அமைதியை கெடுத்தமைக்கும் நன்றி. தெரிந்தோ தெரியாமலோ சிறு குழந்தையாக இருந்த என்னை தைரியமான, உறுதியான, முதிர்ச்சி யான பெண்மணியாக மாற்றியதற்கும் நன்றி.
"ஒரு தாய் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு நீங்கள்தான் உதாரணம்.
"இறுதியாக என் மீது சுமத்தியுள்ள பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் நன்றி," என குறிப்பிட்டுள்ளார் சங்கீதா.
என்றேனும் ஒருநாள் தமது தாயார் உண்மையைப் புரிந்துகொள்வார் என் றும் அன்று தன்னை நினைத்து பெரு மைப்படுவார் என்றும் சங்கீதா கூறி யுள்ளார்.
அவரது இந்தப் பதிவுக்கு ஆறுதல் கூறும் வண்ணம் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!