கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு கதாநாயகனுடன் இணைந்து நடிக்கிறார் ஷோபனா. அந்தக் கதாநாயகன் மலையாள நடிகர் சுரேஷ் கோபி. இருவரும் கடந்த 2005ஆம் அண்டு 'மகளுக்கு' என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். இந்நிலையில் இயக்குநர் அனுப் சத்தியன் இயக்கும் படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார் சுரேஷ் கோபி. இது நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக உருவாகிறதாம். சுரேஷ் கோபி ஜோடியாக ஷோபனா ஒப்பந்தமாகியுள்ள நிலையில் நஸ்ரியா முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். தற்போது சுரேஷ் கோபி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால் அவர் தேர்தல் முடிந்தபிறகே படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். இதையடுத்து ஷோபனா, நஸ்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர். எப்போதாவது படங்களில் நடிக்கும் ஷோபனா, நாட்டிய நிகழ்ச்சிகளை மட்டும் தொடர்ந்து நடத்திய வண்ணம் உள்ளார். அதுவே ஆத்மதிருப்தி அளிப்பதாகவும் சொல்கிறார்.
மீண்டும் இணைந்த நாயகன், நாயகி
1 mins read
ஷோபனா -

