சவாலான வேடத்தில் இனியா

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் இனியா. இந்தப் படம் ரசிகர்களிடம் தமக்கு பாராட் டுகளையும் புதிய வாய்ப்புகளையும் பெற்றுத் தரும் என நம்புவதாகச் சொல்கிறார்.
‘ஓம் சினி வென்ச்சர்ஸ்’ சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குநர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் படம் ‘காபி’. இதில் தான் இனியா குறிப்பிடும் நல்ல கதாபாத்திரம் அவருக்கு வாய்த்துள்ளது.
“ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், மிக இள வயதிலேயே தனது பெற்றோரை இழந்துவிடுகிறான். வாழ்வின் அனைத்து சவால்களை யும் சோதனைகளையும் எதிர் கொண்டு, சமாளித்து, லட்சியத் துடன் தனது கனவை நனவாக்க முயற்சிக்கிறாள். மேலும் பொறுப்பு ணர்ச்சியுடன் தனது தம்பியை நன்கு படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்குகிறாள். 
“இனி சுபிட்சமாக வாழலாம், கஷ் டங்கள் தீர்ந்துவிடும் காலம் வந்து விட்டது என்று அவர் கருதும் போது, சற்றும் எதிர்பாராத பெரும் பின் னடைவுகளையும், அதிர்ச்சிகர மான நிகழ்வுகளையும் அவள் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதில் இருந்து அவள் எப்படி மீள்கிறாள், தனது லட்சியத்தை எப்படி அடைகிறாள் என்பதையே மிக விறுவிறுப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்லப்போகிறார் இயக்குநர்.
“இந்தக் கதையும் இயக்குநர் கதை சொன்ன விதமும் எனக்கு மிகவும் பிடித்தி ருந்தது. அதனால் தயக்கமின்றி நடிக்க ஒப்புக்கொண்டேன்,” என்கிறார் இனியா.
நமக்குத் தெரியாமலே நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மிகப்பெரிய சமூக அவலம் ஒன்றை இத்திரைப்படம் தோலுரித்துக் காட் டும் என்று குறிப்பிடுபவர், இப்படத்தின் சில காட்சிகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த் தும் என்கிறார்.
“மக்கள் மத்தியில் சில விஷயங்கள் குறித்த விழிப்புணர்வை இந்தப் படம் ஏற்ப டுத்தும். அந்த வகையில் இது சமுதாயத்துக்குத் தேவையான ஒரு நல்ல படைப்பு என்பேன்.
“இத்தகைய படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. அந்த விருப்பம் இப்போது நிறை வேறி இருப்பதில் மகிழ்ச்சி. சமூக அவலங் களை தோலுரித்துக் காட்டும் இத்தகைய படைப்புகள் அதிகளவில் வெளிவர வேண்டும். அப்போது தான் சினிமா என்பது மக்களுக்கான களமாக இருக்கும்,” என்கிறார் இனியா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்