சசிகலா வேடத்தில் அமலா பால்

காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்குவதில் பலத்த போட்டி நிலவி வருகிறது.
ஜெயலலிதாவின் வாழ்க்கையை விவரிக்கும் விதமாக ஒரே சமயத்தில் மூன்று படங்கள் தயாராகி வருகின்றன. அவற்றுள் ஒரு படத்தில் அமலா பால் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
அண்மைய காலமாக வித்தியாசமான கதா பாத்திரங்களை ஏற்று நடித்துவருகிறார் அமலா பால். இந்நிலையில் ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் அவர் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஏற்கெனவே இப்படியொரு தகவல் வெளியானபோது அதை அமலா தரப்பு திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில் ஜகதீஸ்வர ரெட்டி என்பவர் தயாரிக்கும் படத்தில் அமலாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி என்ற அமைப்பின் தலைவரான ஜகதீஸ்வர ரெட்டி, ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கப் போவதாகவும், அதை தாமே இயக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும் இந்தப் படத்துக்கு 'சசி லலிதா' என தலைப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
"சசிகலாவின் பார்வையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை சம்பவங்களைப் படமாக்க இருக்கி றோம். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க இந்தி நடிகை கஜோலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
"மும்பை சென்று கஜோலை சந்தித்து கதையை விவரித்து வந்துள்ளேன். இதேபோல் அமலா பாலிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்," என்று ஜகதீஸ்வர ரெட்டி தெரிவித்துள்ளார்.
சசிகலா வேடத்தில் நடிப்பது குறித்து அமலா பால் விரைவில் முடிவெடுப்பார் எனக் கூறப் படுகிறது.
தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத் துள்ள அமலா பால், சவாலான வேடம் என்பதால் சசிகலாவாக நடிக்க சம்மதிப்பார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
சசிகலா வேடத்திற்கு அமலா பால் மிகப் பொருத்தமாக இருப்பார் என்றும் அவர்கள் தெரி வித்துள்ளனர்.
இதற்கிடையே ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு 'தலைவி' என்ற தலைப்பில் தயாராகி வருகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். அவரைத் தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து இயக்குநர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
"இந்தப் படத்தை தமிழ் ரசிகர்களுக்காக மட்டுமல்லாமல், அனைத்து இந்திய ரசிகர் களுக்காகவும் உருவாக்குகிறோம். ஜெய லலிதா வேடத்தில் யாரை நடிக்கவைப்பது என நீண்ட நாட்களாக விவாதம் நடை பெற்றது. அவர் இந்திய அரசியல் களத்தில் மிக முக்கியமான ஆளுமை. அப்படிப்பட்டவரை ஒரு மாநிலத்துக்குள் அடக்கிவிட முடியாது.
"இந்த அம்சங்களை கருத்தில் கொண்டு விவாதித்தபோது, கங்கனா ரணாவத் சிறந்த தேர்வாக இருந்தார்.
"அவரிடம் விவரம் தெரி வித்தபோது ஜெயலலிதா வாக நடிப்பதில் ஆர்வம் காட்டினார். இந்தப் படத்துக் காகவே அவர் தமிழ்மொழி யைக் கற்றுவருகிறார்," என்று இயக்குநர் ஏ.எல்.விஜய் தெரி வித்துள்ளார்.
ஜெயலலிதா குறித்த விஷ யங்களை உள்வாங்குவதற்கு வசதியாக கங்கனாவிற்கு என ஒருமாத காலம் பயிற்சி வழங்க தீர்மானித்துள்ளார் விஜய்.
தமிழில் 'தலைவி' என்ற தலைப்பில் உருவாகும் இப் படத்துக்கு இந்தியில் 'ஜெயா' என்று தலைப்பு வைத்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கும் 'தி அயர்ன் லேடி' படத்தில் ஜெய லலிதாவாக நித்யா மேனன் நடிக் கிறார். இயக்குநர் பாரதிராஜாவும் கூட ஜெயலலிதா வாழ்க்கையைப் படமாக்க முயற்சித்து வருகிறார்.
இயக்குநர் கௌதம் மேனன் ஜெய லலிதா வாழ்க்கை வரலாற்றை இணையத் தொடராக இயக்கி வருகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!