'களவாணி-2' படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அண்மையில் நடிகர் அருண்விஜய் இந்த முன்னோட்டக் காட்சியை தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். இப்படத்தில் விமலும் ஓவியாவும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். மேலும் சூரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், இளவரசி என களவாணி முதல் பாகத்தில் நடித்த பலரும் இதிலும் உள்ளனர். கடந்த 2010ஆம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் வெளிவந்த 'களவாணி' மூலம் ஓவியா தமிழ்ச் சினிமா உலகில் அறிமுகமானார். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் வசூல், விமர்சன ரீதியில் வெற்றி பெறும் என நம்புவதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
'களவாணி-2' முன்னோட்டக் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு
1 mins read
-

