தெலுங்கில் பெரும் வெற்றியைப் பெற்ற 'அனந்தோ பிரம்மா' திரைப்படம் தமிழில் மறுபதிப்பு ஆகிறது. இதில் தமன்னா கதாநாயகியாக நடிக்க உள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு, வெளியான இந்தப் படத்துக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. அதில் டாப்சி நாயகியாக நடித்திருந்தார். மேலும் வெண்ணிலா கிஷோர், ஸ்ரீனிவாஸ் ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் அசத்தி இருந்தனர். திகிலும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்திருந்த கதை என்பதால் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தை தமிழில் மறுபதிப்பு செய்வது தொடர்பாக நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அதன் முடிவில் தமன்னாவை நாயகியாக ஒப்பந்தம் செய்ய உள்ளனர். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. 'அனந்தோ பிரம்மா'வை இயக்கிய மஹி ராகவ்தான் தமிழ்ப் பதிப்பையும் இயக்குவார் எனத் தெரிகிறது. ஏற்கெனவே இந்தி மறுபதிப்பை அவர்தான் இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டாப்சிக்கு பதில் நாயகியான தமன்னா
1 mins read
-

