‘தாய்மை அடையவில்லை’

தான் தாய்மை அடைந்திருப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் நடிகை தீபிகா படுகோன். திருமண மான பிறகு ஒருவரைப் பற்றி இத்தகைய வதந்திகளைப் பரப்புவது சரியல்ல என்று கோபத்துடன் குறிப் பிட்டுள்ளார்.
ஆறு ஆண்டுகள் காதலித்த பின்னர், பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தீபிகா தாய்மை அடைந்திருப்பதாக ஒரு தகவல் பரவியது. 
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவர், திருமணத் துக்குப் பிறகு தாய்மை என்பது முக்கியமானது என்று கூறியுள்ளார்.
“குழந்தை பெற்றுக்கொள்வது என்பது நடக்கும்போது நடக்கும். இப்போது குழந்தை பெற்றுக்கொள் வது குறித்து சிந்திக்கவில்லை,” என்று தீபிகா படுகோன் தெரி வித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்