காதலனை அடையப் போராடும்  3 பெண்கள்

ஜெய் நாயகனாக நடிக்கும் ‘நீயா-2’ திரைப்படத்தில் ராய் லட்சுமி, கேத்தரின் தெரேசா என இரு நாய கிகள் நடிப்பது தெரிந்த விஷயம்.
இப்படம் குறித்து மேலும் சில சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கதைப்படி, ஜெய்யை (சர்வா) ராய் லட்சுமியும் (மலர்), கேத்தரினும் (திவ்யா) போட்டி போட்டுக் கொண்டு காதலிப்பார் களாம்.
ஆனால் சர்வாவுக்கு மலர் மீது தான் காதல். ஆடல், பாடல் என்று ஜாலியாக சுற்றித்திரியும் மலருக்கு திடீரென தலையில் இடி விழுந்தது போல் ஒரு செய்தி வந்து சேர்கிறது.
“தனது காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் மலர். பழைய காதலை மறக்க முடியாமல், காத லன் சர்வாவை தேடி அலைகிறார். அவன் இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து அவனுடன் பேச முற்படுகிறாள்.
“அவன் அறையில் இல்லாத நிலையில், காதல் குறித்த ஏக்கத் துடனும் பறிதவிப்புடனும் மலர் காத்திருக்கும் போது, சர்வா தன் மனைவி திவ்யாவுடன் அங்கு வருகிறான். இருவரையும் கண்டு மலர் ஒளிந்து கொள்கிறாள்,
“இந்நிலையில் சர்வாவும் திவ்யாவும் நெருக்கமாக இருப் பதைக் கண்டு அவளுக்கு கோபம் வருகிறது. இருவரையும் அவள் என்ன செய்கிறாள் என்பது ரக சியம்,” என்று சிரித்தபடியே கூறுகிறார் படத்தின் இயக்குநர்.
இப்படத்தின் முக்கிய காட்சிகளை சாலக்குடியில் பட மாக்கி உள்ளனர். வரலட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித் துள்ளாராம்.
தன் காதல் கைகூட வேண்டும் என்பதற்காக நீண்ட காலம் காத்தி ருக்கும் பெண்ணாக வருகிறார் வரலட்சுமி. அவரது காதல் வெற்றி பெற்றதா? சர்வாவை எப்படியேனும் அடைந்தே தீர வேண்டும் என்ற ராய்லட்சுமியின் எண்ணம் நிறை வேறியதா, இவர்கள் இருவருடனும் போராடும் கேத்தரின் தெரசா வெற்றி பெறுகிறாரா? இடையே நாயகன் செய்யும் தியாகங்கள் என்ன என்பது தான் ‘நீயா-2’ படத்தின் கதைக்களம் என்கிறார் இயக்குநர். எதிர்வரும் மே 10ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்