‘நடிப்பு ஒன்றே வேலை’

அனைத்துலக ரசிகர்களைக் கவரும் வகையில் இணையத் தொடர்களில் நடிக்க ஆர்வத்துடன் இருப்பதாகச் சொல்கிறார் நடிகை வேதிகா. அதே சமயம் இத்தகைய தொடர்களில் தனக்கான கதாபாத்திரங்கள் கனமானதாக, முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என விரும்புகிறாராம்.
‘காஞ்சனா-3’ வெளியாகும் நிலையில், இரண்டு நேரடி தமிழ்ப் படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி உள்ளார் வேதிகா.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பது உற்சாகம் அளிப்பதாகக் குறிப்பிடும் அவர், அண்மைய சில ஆண்டுகளில் கோடம்பாக்கத்துப் படைப்புகளின் தரம் வெகுவாக உயர்ந்துள்ளது என வியப்புடன் கூறுகிறார்.
“ஏன் தமிழில் தொடர்ந்து நடிக்கவில்லை என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். கன்னடத்திலும் மலையாளத்திலும் நான் நடித்த படங்கள் அடுத்தடுத்து பெரிய அளவில் பேசப்பட்டன. அவற்றின் வெற்றி தான் என்னை வேறு எங்கும் செல்லவிடாமல் தடுத்துவிட்டன.
“’சிவலிங்கா’ கன்னட படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதால், கன்னடத்தில் வாய்ப்புகள் குவிந்தன. அதே போல் மலையாளத்தில் திலீப், பிருத்விராஜ் ஆகியோருடன் நடித்த படங்களும் சோடை போகவில்லை. இனி தமிழிலும் கவனம் செலுத்துவேன்,” என்று சொல்லும் வேதிகா, அடுத்து இந்தியிலும் கால்பதிக்கிறார்.
மலையாளத்தில் ‘திரிஷ்யம்’ திரைப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இந்தியில் அறிமுக மாகிறார். அந்தப் படத்தில்தான் வேதிகாவும் போலிவுட்டில் பிரவேசிக்கிறாராம்.
திகில் கதையைத் தான் இந்தியில் இயக்கு கிறார் ஜீத்து ஜோசப். இயல்பாகவே இத்தகைய படங்கள் வெற்றி பெறும் என்பதால் எந்தவிதத் தயக்கமும் இன்றி நடிக்க சம்மதித்ததாகக் கூறுகிறார் வேதிகா.
“ஏன் முன்பே இந்தியில் நடிக்கவில்லை என்றும் சிலர் என்னிடம் கேட்பதுண்டு. பாலிவுட் குறித்து எனக்கு அதிகம் தெரி யாது. அங்குள்ள சினிமா வாழ்வியலை முதலில் நன்கு தெரிந்துகொள்ள வேண் டும். அதற்காகவே காத்திருந்தேன்.”
நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில்  நடித் தால்தான் ஒரு நடிகையால் ரசிகர் களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்ற கருத்தை தம்மால் ஏற்க முடியாது என்று குறிப்பிடுபவர், நாயகனை முன்னிலைப்படுத்தும் சில படங்களில்கூட தமது கதாபாத்திரத்துக்கு முக்கி யத்துவம் அளிக்கப்பட்டதை சுட்டிக் காட்டுகிறார்.
“நாயகியை மையமாகக் கொண்ட படங்களில் நிச்சயம் நடிப்பேன். அதே போல் உலகளவில் பெயர் வாங்கித் தரும் இணையத் தொடர்க ளில் நடிக்கவும் ஆர்வம் உள்ளது. 
“கோலிவுட்டில் கால் பதித்திருப்பதால் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. இப்போதைக்கு நடிப்பு தவிர வேறு எந்தக் களத்திலும் கவ னம் செலுத்தப் போவ தில்லை. எனவே காதல், திருமணம் குறித்தெல் லாம் கருத்து ஏதும் சொல்வதாக இல்லை,” என்று மனதிற்பட்டதை வெளிப்படையாகச் சொல்கிறார் வேதிகா.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்