அருள்நிதியின் அடுத்த படத்தில் அஞ்சலி

சீனு ராமசாமி இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகும் கிராமத்துக் கதையில் அவருக்கு இணையாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகி இருக்கிறார்.
அருள்நிதி தற்போது ‘கே13’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பரத் நீலகண்டன் இயக்கும் இந்தப் படம் விரைவில் வெளியாக இருக் கிறது. இந்த நிலையில், அருள் நிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியா னது.
‘கண்ணே கலைமானே’ படத்தைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்கிறார்.
டைம்லைன் சினிமாஸ் சார்பில் சுந்தர் அண்ணாமலை தயாரிக் கும் இந்தப் படம் கிராமத்துப் பின்னணியில் திகில் கதையாக உருவாக உள்ளது.
இதில் அருள்நிதிக்கு ஜோடி யாக அஞ்சலி ஒப்பந்தமாகி இருப்ப தாகத் தகவல் வெளியாகி இருக்கி றது. படப்பிடிப்பு மே மாதம் துவங்க இருக்கிறது. யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon