பார்த்திபனின் கிண்டலால் அதிர்ச்சியில் படக்குழுவினர்

பார்த்திபனின் கிண்டலால் அதிர்ச்சியில் படக்குழுவினர்

1 mins read
da0d1a8e-63b6-4ae7-86ff-d50b199354d8
-

நீண்ட நாட்களாகப் படப்பிடிப்பு நிறைவுறாமல் இருக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தை பார்த்திபன் கிண்டல் செய்ததால் அப்படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு முன்பாக கௌதம் மேனன் தொடங்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா' படமும் நிதிப் பிரச்சினையால் சிக்கலில் உள்ளது. இதனால், 'துருவ நட்சத்தி ரம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. இந்நிலையில், 'துருவ நட்சத்திரம்' படத்தின் தாமதம் தொடர்பாக பேட்டியொன்றில் கூறிய பார்த்திபன், 'நான் சிறு வயதில் நடித்த படம்' என்று பேசியிருந்தார். இது படக்குழுவினர் மத்தியில் கவலையை உண்டாக்கியது. தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்தை மீண்டும் கிண் டல் செய்துள்ளார் பார்த் திபன். இப்படத்தின் உதவி இயக் குநர் பார்த்தியின் குறும்படம் ஒன்றைப் பகிர்ந்துகொண்ட பார்த்திபன், "பார்த்தி இயக்கு நராகும் போது துருவ நட்சத்திரம் வெளியாக வாழ்த்துகள்," என்று பதிவிட்டுள்ளதால் படக்குழுவி னர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் படத்தின் முக் கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டே, படத் தைக் கிண் டல் செய்வது சரி யல்ல என்பது அவர்கள் எண் ணம்.