சுடச் சுடச் செய்திகள்

‘என் கனவு நிறைவேறியது’

‘விக்ரம் வேதா’ படம் வெளியானது முதல் பரபரப்பான நடிகையாகி விட்டார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது அஜீத்துடன் ‘நேர்கொண்ட பார்வையில்’ முக்கிய கதாபாத்திரம், அருள் நிதியின் ‘கே-13’ எனத் தமிழில் மட்டும் நான் கைந்து படங்களில் ஒப்பந்தமாகி உள்ளாராம். 
தமிழில் கால்பதித்த பிறகு அளித்த முதல் பேட்டியிலேயே தன்னை அஜீத் ரசிகையாக வெளிப்படுத்திக் கொண்டவர் ஷ்ரத்தா. 
இந்நிலையில் தமிழில் நடிக்கத் தொடங்கிய இரண்டாண்டுகளுக்குள் அஜீத்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது ஏதோ கனவு போல் இருப்பதாகச் சொல்கிறார். 
“ரசிகர்களைப் போலவே எனக்கும் கூட  இப்படி ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்தது ஆச்ச ரியத்தை ஏற்படுத்துகிறது. ‘விக்ரம் வேதா’வில் எனது நடிப்பு நன்றாக இருந்ததாகச் சொல்லிக் கடந்த டிசம்பர் மாதமே அஜீத் படக்குழுவில் இருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. அதன் பிறகு ஒப்பனை, நடிப்புச் சோத னைக்காக தகவல் கொடுத்தனர். உடனே, விமானம் ஏறி சென்னை வந்து விட்டேன். 
“அப்போது நடந்த சோதனைக்குப் பிறகு எந்தத் தொடர்பும் இல்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அழைப்பு வந்தது. அப்போது எனக்கான கதாபாத்திரத்தை விவரித்து நடிக்கச் சம்மதமா என்று கேட்டபோது கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. எப்படியோ என் கனவு நிறைவேறி விட்டது,” என்று ஒருவித சிலிர்ப்புடன் சொல்லி தோள்களைக் குலுக்குகிறார் ஷ்ரத்தா. 
கதை பற்றி வெளியே மூச்சு விடக்கூடாது என ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் இயக்குநர் தரப்பு கட்டுப்பாடு விதித்திருப்பதால் மேற் கொண்டு பேசமறுக்கிறார். ஷ்ரத்தா காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர். தந்தை இராணுவத்தில் பணியாற்றியதால் காஷ்மீர் தொடங்கி தென் னிந்தியக் கடைக்கோடி வரை பல நகரங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், நாடு முழுவதும் சுற்றி வந்ததாகச் சொல்கிறார். 
கன்னடம்தான் தாய்மொழி. தாயார் பள்ளி ஆசிரியை. பள்ளிப்படிப்பை முடித்ததும் சட்டப்படிப்பை மேற்கொண்டு, பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சட்ட ஆலோ சகராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. ஆனால், மனதுக்குள் சினிமா ஆசை இருந்தபடியால் சட்டப்பணியில் முழுக் கவனத்தையும் செலுத்த முடியவில்லையாம்.
“இயல்பாகவே எனக்கு நடிப்புக் கலை மீது ஆர்வம் அதிகம். கன்னடத்தில் ‘யு டர்ன்’ பட வாய்ப்பு வந்ததும் மிகுந்த மகிழ்ச்சியோடு வழக்கறிஞர் பணியை உதறிவிட்டேன். நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவள் இப்போது சினிமா நடிகையாகி அஜீத் துடன் நடிக்கிறேன் என்றால், என்னைப் பொறுத்தவரை இது சாதாரண விஷ யமல்ல. மிகப்பெரிய வளர்ச்சி,” என்று சொல்லும் ஷ்ரத்தாவுக்கு நாடகம், சினிமாவைத் தவிர வேறு பல விஷ யங்களும் ரொம்பப் பிடிக்குமாம். 
குழந்தைகளைக் கண்டால் உடனே தூக்கிக் கொஞ்சத் தொடங்கி முத் தமழை பொழிந்து விடுவாராம். படப்பிடிப்பு இல்லாத சமயங் களில் நாள் முழுவதும் தனது சகோதரியின் குழந் தையுடன் விளையாடுவது தான் இவருக்கு முக்கியப் பொழுதுபோக்கு.
“அதுமட்டுமல்ல மெது ஓட்டம், (ஜாக்கிங்) என் றால் கொள்ளைப் பிரியம். தினமும் காலை முக்கால் மணி நேரம் மெது ஓட்டம் செய்வேன். ஜீன்ஸ், டிசர்ட் ஆகியவையும் பிடிக்கும். 
“விதவிதமான வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதும் சேகரிப்ப தும் அலாதியான இன்பம் தரும். என்னைப் பற்றி வரும் கிசுகிசுக்களை மிகவும் ரசிப்பேன். 
“சென்னையில் 5 படுக்கை அறை வசதி கொண்ட பெரிய வீட்டை வாங்கியிருப்பதாக ஒரு செய்தி படித்தேன். அது பொய்யாக இருந்தாலும் சிரிப்பு தான் வந்தது. இன்னும் அவ்வளவு வசதி வரவில்லை. ஆனால் அப்படி நடக்க வேண்டும் என விரும்பு கிறேன்,” என்கிறார் ஷ்ரத்தா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon