கவுதமை பாராட்டும் ‘தேவராட்டம்’ இயக்குநர்

‘தேவராட்டம்’ படம் வெளியீடு காணத் தயாராகிவிட்டதாகத் தகவல். ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கத்தில் உருவாகும் படம் இது. முன்னணிக் கதாநாயகர்கள் கால்‌ஷீட் வழங்கத் தயாராக இருந்த போதிலும், கவுதம் கார்த்திக்கை களம் இறக்கி இந்த ஆட்டத்தை ஆடுகிறார் முத்தையா.
“இன்றைய இளையர்களிடம் நல்ல விஷயங்களை விதைக்கவில் லையோ என்று தோன்றுகிறது. ஊரோடு வாழ், உறவோடு வாழ் என்று பெரியவர்கள் சொன்னது எல்லாம் மறந்து போய்விட்டோம். இதன் பாதிப்புகள் சினிமாவிலும் வெளிப்படுகிறது. 
“இந்தத் தலைமுறை எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று யோசிக்கும்போது ஒரு திடீர்ப் பயம் மனதைக் கவ்வுகிறது. மனிதனாக, ஒரு கலைஞனாக எனது ஏக்கம் என்னவென்றால், மனிதத்தன்மை மறைந்துவிடக் கூடாது என்பது தான். 
“உறவையும் மனித மாண்பை யும் உயர்த்திப்  பிடிப்பதே ஒரு கலைஞனாக எனது வேலை என நினைக்கிறேன். இந்த உணர்வுகளை இந்தப் படத்திலும் காண முடியும்,” என்கிறார் முத்தையா. 
படப்பிடிப்பை தொடங்கிய 53 நாட்களிலேயே அனைத்துக் காட்சிகளையும் திட்டமிட்டபடி படமாக்கி உள்ளது ‘தேவராட்டம்’ குழு. இதற்குக் காரணம் நாய கன் கவுதம் கார்த்திக்கின் உழைப்புதான் என்று மனதாரப் பாராட்டுகிறார்.
“நாயகனின் ஈடுபாடு இல் லாமல் ஆகக் குறைந்த நாட்களில் படத்தை முடித்திருப்பது சாத்தி யமே இல்லை. இதனால் என் திறமைக்கு ஏற்ற மாதிரியும் அவரது அக்கறைக்கு ஏற்பவும் படம் அருமையாக உருவாகி உள்ளது. மஞ்சிமா மோகன் நாயகியாக நடித்துள்ளார். 
“இதில் அவருக்கு வழக்கறிஞர் வேடம். மலையாளப் பெண்ணாக இருந்தாலும் பார்ப்பதற்குத் தமிழ்ப் பெண்ணின் சாயல் இருப்பது கூடுதல் பலம். சொன்ன நேரத் திற்குப் படப்பிடிப்புக்கு வந்து விடுவார். நாம் எத்தகைய ஒரு நடிப்பை எதிர்பார்க்கிறோமோ அதை வழங்கக் கூடிய திறமை உள்ளவர்.”
மஞ்சிமாவின் மூத்த சகோத ரியாக வினோதினி, கௌதமின் மாமனாக சூரி நடித்துள்ளனர். இவர்களுடைய கூட்டணி நகைச் சுவையில் அசத்தி இருக்கி றதாம். நிவாஸ் பிரசன்னா இசை யில் மொத்தம் 7 பாடல்கள் ஒலிக்கின்றன. கிராமத்துப் பின் னணியில் அமைந்துள்ள பாடல்கள் மனதை சொக்க வைக்குமாம்.
“நான் சாதிப் படங்களாக எடுக்கிறேன் என்று ஒரு முணுமுணுப்பு உள்ளது. நான் எந்தச் சாதியையும் வெளியே சொல்வதில்லை. அவரவர் தங்கள் வசதிக்கேற்ப பாதை என்று எதையோ பிடித்துக்கொண்டு விமர்சிக்கிறார்கள். 
“உறவுகளும் மக்களின் மேன் மையும் சிதறாமல் வலிமையாக இருக்க வேண்டும் என்பதே எனது நிரந்தர எண்ணம். நான் சொல்லும் உறவுகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது,”  என்கிறார் இயக்குநர் முத்தையா.
இந்தப் படம் மிகச் சிறப்பாக உருவாகி இருப்பதால், தனது திரை வாழ்க்கையில் நிச்சயம் ஒரு மைல் கல்லாக அமையும் என உறுதியாக நம்புவதாகச் சொல்கிறார் கவுதம் கார்த்திக்.