நட்டி நட்ராஜ், மனிஷா யாதவ் நடிப்பில் `சண்டி முனி'

1 mins read
8d836040-e005-44b0-b532-46dfed626765
-

ஒளிப்பதிவாளர் நட்டி எனும் நட்ராஜ் நடிக்க வந்த பிறகு, எல்லாமே அவருக்கு ஏறுமுகம் தான். அவர் நடிக்கும் படங்கள் வசூல் ரீதியில் கையைக் கடிக்காமல் இருப்பதால், விநியோகிப்பாளர்களும் அவர் மீது பாசமாக உள்ளனர். இந்நிலையில் மில்கா எஸ். செல்வகுமார் இயக்கத்தில் நட்டி நட்ராஜ், மனிஷா யாதவ் நடிப்பில் உருவாகி வருகிறது `சண்டி முனி'. இதில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வாசு விக்ரம், சாம்ஸ், ஆர்த்தி, தவசி, குண்டு ரவி, முத்துக்காளை ஆகியோரும் உள்ளனர். ஏ.கே.ரிஷால் சாய் இசைய மைக்க, வ.கருப்பன் பாடல்களை எழுதியுள்ளார். "இது ஒரு திகில் படம். நட்ராஜ் சண்டி என்கிற கட்டுமான பொறி யியலாளர் வேடத்தில் நடிக்கிறார். மனிஷா யாதவ் ராதிகா என்கிற ஆசிரியையாக நடிக்கிறார். முழுநீள குடும்பப் படமாக உருவாகும் இதில், நகைச்சுவைக் கும் பஞ்சமே இருக்காது. ஒரு பெண்ணுக்கும், பேய்க்கும் இடையே நடக்கும் போராட்டத்தால் சூழ்நிலை போர்க்களம் ஆகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே மாட்டிக் கொண்டு விழிக்கிறார் நட்ராஜ். "இந்த மோதலின் முடிவில் என்ன ஆகிறது? என்பதை மிகவும் சுவாரசியமாகவும், சராசரி ரசிகர்களைக் கவரும் வகையிலும் படமாக்கி உள்ளோம். இது குடும் பத்துடன் பார்க்க வேண்டிய படைப்பு," என்கிறார் இயக்குநர்.