கோலிவுட்டில் தமக்கென ஒரு குழுவை அமைத்துக் கொண்டு செயல்படுவதாக வெளியான தகவலை அடியோடு மறுத்துள்ளார் டாப்சி. தனக்காக அந்தக் குழுவைச் சேரந்தவர்கள் வாய்ப்புகளைத் தேடிப் பிடிப்பதாக வெளியான தகவல் பொய் என்றும் கூறியுள்ளார். "நான் எந்தவொரு குழுவையும் சேர்ந்தவர் அல்ல. நான் நடித்த முந்தைய படங்களின் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோர் மீண்டும் எனக்கு வாய்ப்பு தர விரும்புகிறார் கள். எனது நடிப்பு அவர்களுக்குப் பிடித்திருப்பதே காரணம். "இப்படித்தான் இந்தித் திரையுலகில் என்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். மற்றபடி எனக்குப் பின்னால் ஒரு குழு இருப்பதாகக் கூறப்படுவது அர்த்தமற்றது. அந்த வகையில் கிடைக்கும் வாய்ப்புகளைக் கொண்டு நம் திறமையை நிரூபிக்க இயலாது," என்கிறார் டாப்சி.
டாப்சி: அது உண்மை அல்ல
1 mins read
டாப்சி -

