லட்சுமி மேனன்: நடனம் எனக்கு உயிர்

தமிழில் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று சில மாதங்களுக்கு முன் தகவல் வந்ததோடு சரி. அதன் பிறகு லட்சுமி மேனன் குறித்து எந்தத் தகவலும் இல்லை.
திடீரென்று பார்த்தால் குச்சுப்புடி நடனம் குறித்து டிப்ளோமா படித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகிறது.
திடீரென நடிப்பைக் கைவிட்டு நடனம் பக்கம் சென்றது ஏன் என்று கேட்டால் அப்படியெல்லாம் இல்லைங்க என்று சிரிக்கிறார் லட்சுமி.
"நடிப்பை நான் கைவிடவில்லை. நான் கடைசியாக பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த 'யங் மங் சங்' எப்போதோ வெளியாகி இருக்க வேண்டும். படம் முடிந்து ரொம்ப நாளாகி விட்டது. மிக விரைவில் வெளியீடு காணும் என நினைக்கிறேன். அடுத்து இரு தமிழ்ப் படங்களில் நடிக்க கதை கேட்டு வைத்துள்ளேன். எல்லாம் முடிவானதும் நிச்சயம் விவரம் தெரிவிப்பேன்," என்கிறார் லட்சுமி.
இடையே சில காலம் படங்களில் நடிக்கா ததால் வாழ்க்கை ஒன்றும் கசந்துவிட வில்லையாம். எங்கே, எப்படி இருந்தாலும் தாம் மகிழ்ச்சியாக உணர்வதாகவும் சொல்கிறார்.
"வாழ்க்கை என்ன கொடுக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்கிற மனநிலை எனக்கு இருக்கிறது. இது ஏற்ற இறக்கங்கள் கொண்ட வாழ்க்கை. அதையும் உணர்ந்திருக்கிறேன். அதனால் எனக்கு ஏற்பட்டுள்ள இந்த இடை வெளியை மகிழ்ச்சியாகவே கழித்துள்ளேன் என்று முதிர்ச்சியுடன் பேசும் லட்சுமிக்கு, சிறு வயது முதலே நடனத்தில் ஆர்வம் உண்டாகி விட்டதாம்.
3 வயது முதல் நடனம் கற்று வருகிறார். நடனம் மட்டுமல்லாமல் பட்டப்படிப்பையும் மேற்கொண்டுள்ளார் என்பது உபரித் தகவல்.
"நடனம் என்றால் எனக்கு உயிர் என்று சொல்லலாம். புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில் குச்சுப்புடி நடனத்தில் கவனம் செலுத்தலாம் என்று தோன்றியது. அதனால் டிப்ளோமா படித்து வருகிறேன்.
"கூடவே சோசியாலஜி தொடர்பாக தனியார் மூலம் பட்டப்படிப்பும் மேற்கொண்டுள்ளேன். ஏற்கெனவே பரதநாட்டியம் தொடர்பாகவும் படித்துள்ளேன் என்பது ரசிகர்களுக்கு நினை விருக்கும்."
படங்களில் நடிக்காவிட்டாலும் தமிழ் ரசிகர்கள் இன்னும் தன்னை நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாகக் குறிப்பிடுபவர், அடுத்து நடிக்கும் படங்களின் மூலம் அவர்களைத் திருப்திபடுத்த வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பதாகச் சொல்கிறார்.
இடையே தன்னைப் பற்றி வெளியான ஒரு காணொளித் தொகுப்பால் மனம் ரொம்பவே வேதனைப்பட்டதாகச் சொல்கிறார். அந்த விவகாரத்தில் இருந்து மீண்டுவர மிகவும் சிரமப்பட்டாராம்.
"ஒருமுறை என்னைப் பற்றிய காணொளிப் பதிவு பொதுவெளியில் வேகமாகப் பரவியது தெரிந்திருக்கும். அது சித்திரிக்கப்பட்ட காணொளி, அதிலுள்ளது அனைத்துமே பொய் என்பது எனக்கு மட்டுமல்ல எல்லோ ருக்குமே தெரியும். இது தொடர்பாக எல்லோரும் எனக்கு ஆதரவாகவே பேசினர். அந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டுவர எனக்கு சில வாரங்கள் தேவைப்பட்டது.
அந்தச் சமயத்தில் என் னால் இயல்பாக இருக்க முடியவில்லை. மனதளவில் மிகவும் அவதிப்பட்டேன்.
ஒட்டு மொத்தமாக அந்த விவகாரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ளேன் என்று லட்சுமி சொல்வதைக் கேட்கும்போது பாவ மாகத்தான் இருக் கிறது.
உங்களைப் போன்ற இளம் பெண் களுக்கு நீங்கள் சொல்லும் அறி வுரை?
"நல்ல நிலை யில் உள்ள ஒரு வரைப் போல வாழ்க்கையில் முன்னேற வேண் டும் என்று நினைப்பதில் தவறில்லை.
"அதேசமயம் எதற்கெடுத் தா லும் அவரை மாதிரி இருக்கணும், இவரை மாதிரி இருக் கணும் என்று நினைக்கி றீர்கள் எனில், அப்போது தான் சிக்கல் உரு வாகும்.
"நடக்கும் எல்லாமே மனித வாழ்க்கையின் ஒரு பகுதிதான். என வேதான் அடித்துச் சொல்கிறேன். எது குறித்தும் நாம் அதிகமாக யோசித்துக் கவலைப்படக்கூடாது.
"எனவே திடீர் இடை வெளி, பிரச்சினைகள் ஆகிய எதையும் நான் பெரிதாக எடுத்து கொள்வ தில்லை.
"எப்போதும் மகிழ்ச்சி யாக இருக்க வேண்டும். எது குறித்தும் வீணாகக் கவலைப்படாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. இதே ஆசை மற்றவர்களுக்கும் வர வேண்டும். அது நிறைவேற வேண்டும் என்பதும் எனது விருப்பம்," என்கிறார் லட்சுமி.
2019-04-22 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!