'ராங்கி'க்கு உதவும் இயக்குநர் முருகதாஸ்

'ராங்கி'க்கு உதவும் இயக்குநர் முருகதாஸ்

2 mins read
fc6103b0-c726-4ebc-8bf0-51468e7303b4
-

கதை, நடிகை தேர்வு, தயாரிப்பு என எல்லாவிதத்திலும் தன்னிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சர வணனுக்கு உதவியுள்ளார் இயக்குநர் முருக தாஸ். 'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்றவர் சரவ ணன். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயா ரிக்க, ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட் டது.

ஆனால், 'இவன் வேற மாதிரி', 'வலியவன்' போன்ற அடுத்தடுத்த படங்களில் சறுக்கினார் சரவ ணன். எனவே பட வாய்ப்பு இல்லா மல் கன்னடப் படம் இயக்கப் போனார் சரவணன். அங்கே யும் சரிவராத நிலையில் மீண்டும் தமிழுக்குத் திரும்பி வந்தார். அவருக்கு உதவி செய்யும் நோக்கத்தில் முருக தாஸ் கதாநாயகிக்கு முக் கியத்துவம் உள்ள அதிரடி கதையைச் சொல்லி வசனமும் எழுதி கொடுத்து அதில் திரிஷா நடிக்கவும் சிபாரிசு செய்துள்ளார்.

அதுமட்டுமல்ல, அடுத்த டுத்துப் பல படங்களைத் தயாரித்து வரும் 'லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனத் திடம் சரவணனுக்காக இந்தப் படத்தைத் தயாரிக் கவும் சொல்லி கேட்டிருக்கி றார். முருகதாஸ் எழுதிய அந்தக் கதையைக் கேட் டதும் மறுபேச்சுப் பேசாமல் நடிக்க ஒப்புக்கொண்டார் திரிஷா. 'ராங்கி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கதாநாயகன் கிடை யாது என்பது கூடுதல் தக வல். மற்ற கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பவர்களுக்கான தேர்வு மும்முரமாக நடை பெற்று வருகிறது.

இதற்கிடையே, இன்னோர் படத்தில் சித்தார்த் ஜோடியாக மீண்டும் திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியில் வெளியான 'அந்தாதுன்' படத்தின் தமிழ் தயாரிப்பில் இவர்கள் மீண்டும் ஜோடி சேர உள்ளதாகக் கூறப் படுகிறது.

இப்படத்தில் ஆயுஷ்மேன் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்து இருந்தனர். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தில் ராதிகா ஆப்தே, தபு நடிப்புக்குப் பாராட்டுகள் குவிந்தன.

கடந்த 3ஆம் தேதி சீனா வில் இந்தப் படம் 'பியானோ பிளேயர்' என்ற பெயரில் வெளியாகி 13 நாட்களில் ரூ.200 கோடி வரை வசூல் குவித்துச் சாதனை நிகழ்த் தியது. இதுகுறித்துப் படத்தில் நடித்த ஆயுஷ்மேன் டுவிட் டரில், "சினிமா எப்போதுமே எல்லைகளையும் மொழிகளை யும் கடந்து செல்லக் கூடி யது. அந்த வகையில் சிறந்த படத்துக்கான வரவேற்பை 'அந்தா துன்' படம் சீனாவில் பெற்று இருப்பது நமது நாட்டுக்குப் பெருமையான விஷ யம்," என்று கூறி யுள்ளார்.

தற்போது ஆயுஷ் மேன் கதாபாத்திரத் தில் சித்தார்த்தையும் ராதிகா ஆப்தே நடித்த பாத்திரத் தில் திரிஷாவையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகி றது.