‘சிரமப்படுபவர்களின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்ளுங்கள்’

சிரமப்படுபவர்களுக்கு தன் ரசிகர் கள் உதவுவதே தனக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று கூறியுள்ளார் நடிகர் லாரன்ஸ்.
லாரன்ஸ் இயக்கி, நடித்திருக் கும் 'காஞ்சனா 3' படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண் டிருக்கிறது.

ரசிகர்களிடையே படத்திற்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலை யில், படம் வெற்றி பெற ரசிகர் ஒருவர் கிரேன் மூலமாக தூக்குக் காவடி எடுத்துச் சென்று லாரன் சின் ஆள் உயர 'கட்அவுட்'டுக்குப் பாலபிஷேகம் செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் பலரது கவ னத்தையும் பெற்றது.

இந்த காணொளியைப் பார்த்த பலரும், ரசிகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாத வண்ணம் லாரன்ஸ் அவர்களுக்கு அறிவுரை வழங்கும்படி கூறி வந்தனர்.
குறிப்பாக இயக்குநரும் நடிக ருமான நவீன், "இது போன்ற மூடத்தனத்தையும் முட்டாள் ரசிகர் களையும் வளர்ப்பதால் நடிகர்கள் வளரலாமே தவிர நாடு வளராது. இதைத் தடுப்பதைச் சம்மந்தப்பட்ட நடிகர்கள் முக்கிய கடமையாகக் கருதவேண்டும். நீங்கள் மனித நேயமிக்க நல்ல மனிதர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டம் இது," எனப் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, அக்காட் சியைப் பார்த்த லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுபோன்று செய்யாதிருக்கு மாறு ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில், "ரசிகர் ஒருவர் இது போன்று கிரேன் மூலமாக எனது 'கட்அவுட்'டுக்கு பாலபிஷேகம் செய்யும் காணொளியைப் பார்த்து மிகவும் வருத்தமடைகிறேன்.
"எனது ரசிகர்கள் அனைவரி டமும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், இனிமேல் இதுபோன்ற ஆபத்தான செயல் களில் ஈடுபடாதீர்கள்.

"உங்களது அன்பை வெளிப் படுத்த உங்களது வாழ்க்கையைப் பணயம் வைக்கும் இதுபோன்ற செயல்கள் தேவை இல்லை. உங் களுக்காக ஒரு குடும்பம் இருக் கிறது. இவ்வாறு செய்வதற்கு முன்பாக அவர்களைப் பற்றி சிந்தி யுங்கள்."ஒருவேளை என் ரசிகராக உங்களது அன்பை வெளிப்படுத்த விரும்பினால், படிக்கச் சிரமப்படும் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொள் ளுங்கள், தேவை யானவர்களுக்கு புத் தகங்கள் வாங்கிக் கொடுங்கள்.
"மூத்தோர் பலர் இங்கு உணவின்றி தவிக்கிறார் கள். அவர்களுக்கு உணவளியுங் கள். அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.

"எனவே இதுபோன்ற ஆபத் தான செயல்களை இனிமேல் செய்ய வேண்டாம் என்பதே எனது கோரிக்கை. உங்கள் வாழ்க்கையே முக்கியம்," என்று பதிவிட்டுள்ளார்.2019-04-23 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!