ஒரே படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக்

கன்னடப் படமான ‘முஃப்தி’யின் தமிழ் தயாரிப்பில் நடிக்க சிம்பு, கௌதம் கார்த்திக் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில், ஸ்ரீமுரளி நடித்த கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக்கும் புனித் ராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவும் நடிக்கவுள்ளனர்.
‘முஃப்தி’ இயக்குநரான நர்தன் தமிழிலும் இயக்குகிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இருவருடனும் இணைந்து நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. கன்னடத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருக்கும். அதனை மட்டும் தமிழில் கொஞ்சம் குறைக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது.
‘மாநாடு’, ‘முஃப்தி’ போன்ற மறுதயாரிப்புகளில் மட்டுமல்லாது, ஹன்சிகாவின் 50வது படமான ‘மகா’விலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிம்பு.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon