தன்மீது பழி சுமத்தியவருக்கு பிரியா ஆனந்த் சாட்டையடி பதில்

தன்மீது பழி சுமத்தியவருக்கு பிரியா ஆனந்த் சாட்டையடி பதில்

2 mins read
80de2b0d-4b87-480d-934c-7af5858cfec2
-

தன்னுடைய சக நடிகர், நடிகை களின் நிலை குறித்து தன்மீது பழிபோட்டு விமர்சித்தவருக்கு நடிகை பிரியா ஆனந்த் சாட்டையடி பதிலளித்துள்ளார். சமூக ஊடகங்களில் நடிகர் கள், நடிகைகளைக் கடுமையாக விமர்சிப்பது அதிகரித்துக் கொண் டிருக்கிறது.

இந்நிலையில் டுவிட்டர் பய னாளி ஒருவர் நடிகை பிரியா ஆனந்த் மீது பழிபோட்டு டுவீட் செய்திருந்தார்.அதைப் பார்த்த பிரியா அவருக்குத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.

"இங்கிலிஷ் விங்கிலிஷ் படத் தில் ஸ்ரீதேவி, பிரியா ஆனந்துடன் நடித்தார். தற்போது ஸ்ரீதேவி உயி ருடன் இல்லை. எல்கேஜி படத்தில் ஜே.கே.ரித்தீஷ் பிரியா ஆனந்துடன் நடித்தார். அவரும் இறந்துவிட்டார். பிரியா ஆனந்துடன் சேர்ந்து நடிப் பவர்கள் இறக்கிறார்கள்.

"சக கலைஞர்களுக்குக் கெட்ட ராசியின் அடையாளமா பிரியா ஆனந்த்," என்று ஒருவர் டுவீட் செய்திருந்தார். டுவிட்டர் பயனாளியின் இந்த விமர்சனத்தைப் பார்த்த பிரியா ஆனந்த், "நான் வழக்கமாக உங்களைப் போன்றவர்களுக்குப் பதில் அளிப்பது இல்லை.

"ஆனால் நீங்கள் தெரிவித்த விஷயம் மோசமானது என்பதை உங்களுக்குப் புரிய வைக்க விரும் புகிறேன். உங்களை நான் பதி லுக்குத் தரக்குறைவாகப் பேச மாட்டேன். "உங்கள் டுவிட்டர் கணக்கின் பெயர் அன்பு என்று உள்ளது. அது உங்களுக்கு ஒரு நாள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

"அன்பு என்கிற ஒரு விஷயத் தால் மட்டுமே இந்த உலகம் இயங் குகிறது," என்று அன்பாக பதி லளித்திருந்தார் பிரியா ஆனந்த். பிரியா ஆனந்தின் பதில் டுவிட்டைப் பார்த்த அந்த நபர், "என் தவற்றை உணர்ந்துவிட்டேன். இன்று நான் எல்கேஜி, இங்கிலிஷ் விங்கிலிஷ் என இரு படங்களையும் பார்த்தேன்.

"இரண்டு படங்களிலும் நீங் கள் நடித்திருந்ததால் அந்தக் கேள்வி எழுந்தது. அதனால் அப்படியே டுவீட் செய்தேன். "நீங்கள் டுவீட்டுகளை பார்க்க மாட்டீர்கள் என்று நினைத்தேன். உங்களைக் காயப்படுத்தியதற்கு வருந்துகிறேன்," என்று அந்த டுவிட்டர் பயனாளி மன்னிப்பு கேட்டுள்ளார்.