சுடச் சுடச் செய்திகள்

மனிதர்களின் ஆசைகளை விவரிக்கும் புதுப் படம்

விதார்த், ஜானவி, சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ஆயிரம் பொற்காசுகள்’. அறிமுக இயக்குநர் ரவி முருகையா கைவண்ணத்தில் இப்படம் உருவாகி உள்ளது.

இயக்குநர் ஆக வேண்டும் எனும் கனவுடன் 13 ஆண்டு காலம் போராடினாராம் இவர். அதன் பிறகே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வளவு ஆண்டு காலம் காத்திருந்த போதிலும், தமக்கு சினிமா மீது வெறுப்பு ஏதும் வரவில்லை என்கிறார் ரவி முருகையா.

மாறாக, இத்துறை மீதான காதல் அதிகரிக்கவே செய்ததாம். தன்னைப் பொறுத்தவரை திரைத்துறை என்பது திரும்பிச் செல்ல முடியாத ஒருவழிச் சாலை என்று சொல்பவர், இத்துறையில் விரக்தியிலும் ஒருவித மகிழ்ச்சி இருக்கவே செய்கிறது என்கிறார்.

‘ஆயிரம் பொற்காசுகள்’ படம் குறித்து?

“முன்பு வெளியான ‘முகவரி’ படத்தில் ‘10 அடியில் தங்கம்’ என்ற நீதிக்கதையை நடிகர் ரகுவரன் சொல்வார். அதுதான் இப்படத்துக்கான மூலம் எனலாம். கிராமத்தில் இருக்கும் வெள்ளந்தி மனிதர்கள் பற்றிய கதை. எவ்வளவுதான் பணம், சொத்து, சுகம் இருந்தாலும், கீழே பத்து ரூபாய் நோட்டு கிடந்தால் எடுக்காமல் போக மாட்டோம். மனிதர்களின் ஆசை எப்படியெல்லாம் இருக்கிறது என் பதை இப்படம் பேசும். தஞ்சாவூர் அருகே உள்ள குருவாடிப்பட்டி என்ற கிராமத்தில் முழு படத்தை யும் 38 நாட்கள் படமாக்கினேன்.

“இருப்பதை விட்டுவிட்டு, இல்லாததைத் தேடிப் போவதுதான் ‘ஆயிரம் பொற்காசுகள்’ படக் கதை. அரசின் இலவசப் பொருட் களை வைத்து மட்டுமே வாழ்க்கை நடத்தும் சோம்பேறிதான் சரவ ணன். அரசுத் திட்டத்தில் கழிப்பறை கட்டும்போது, எதிர் பாராத விதமாக ஒரு புதையல் கிடைக்கிறது. அதன் பிறகு நடக்கும் விஷயங்கள் இன்னும் சுவாரசியமாக இருக்கும். 

“முழுநீள கிராமத்துப் பின்னணி யில் முழு நகைச்சுவை படம். திரையரங்குக்கு வருபவர்கள் வயிறு குலுங்கச் சிரிக்கலாம்.”

விதார்த்தைத் தேர்வு செய்யக் காரணம்?

“அவர் எனக்கு நல்ல நண்பர். இப்படத்துக்கு முன்பு 3 கதைகள் வரை அவரிடம் சொல்லி இருக் கிறேன். அவரிடம் ‘இந்தக் கதையை கேட்காமல் நடியுங்கள். வித்தியாசமாக இருக்கும்’ என்றேன். அவரும் கதையைக் கேட்காமலே நடித்தார். அந்த நம்பிக்கைக்கு முதலில் நன்றி. சரவணன் கதாபாத்திரத்துக்கு நிறைய பேரைத் தேடி, கடைசியில் அவரை நடிக்க வைத்தோம். 

“கிராமத்தில் போகிற, வருகி றவர்களை எல்லாம் புரணி பேசிக்கொண்டு வீட்டிலேயே சிலர் இருப்பார்கள். தலையாரி, மின் ஊழியர்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என எதற்கு ஆட்கள் வந்தாலும் கிராமத்தில் பதில் சொல்வதற்கென்றே ஒருவர் இருப் பார். அதுதான் ஆணிமுத்து கதா பாத்திரம். அதைத்தான் சரவணன் செய்திருக்கிறார். தமிழ்நாதனாக விதார்த், பூங்கோதையாக ஜானவி நடித்துள்ளனர். திரையுலகில் நன்கு பரிச்சயமான மேஸ்திரி ராமலிங்கம் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகியுள்ளார்,” என்கிறார் ரவி முருகையா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon