அடிதடி படத்தில் நடிக்கும் வரலட்சுமி

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு எனப் பல்வேறு மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் வரலட்சுமி, போதாத குறைக்கு அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பார்க்க முடிகிறது.

‘டேனி’, ‘வெல்வெட் நகரம், ராஜபார்வை உள்ளிட்டவை வரலட்சுமி தனி நாயகியாக நடிக்கும் படங்கள். இதைத் தவிர கன்னித்தீவு, விமலுடன் கன்னிராசி, ஜெய்யுடன் ‘நீயா 2’, வைபவுடன் காட்டேரி, தெலுங்கில் சந்தீப் கி‌ஷணுடன் தெனாலி ராமன் பி.ஏ.பி.எல், கன்னடத்தில் ரணம் ஆகிய படங்களும் கைவசம் உள்ளன.

இந்நிலையில் வீரக்குமார் இயக்கத்தில் த‌ஷி இசையமைக்க, கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் `சேஸிங்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் வரலட்சுமி.

இப்படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்படுகிறது. அது மட்டுமல்ல. படம் முழுவதும் அதிரடி சண்டைக் காட்சிகளும் திகிலூட்டும் விஷயங்களும் நிறைந்திருக்குமாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon