ஜோதிகாவும் ரேவதியும் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பின் கடைசி நாளன்று சூர்யா வருகை தந்து படக்குழுவினரை வாழ்த்தி உள்ளார். கல்யாண் இயக்கத்தில் உரு வாகும் புதிய படத்தில் ஜோதிகா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரேவதி முக்கிய கதா பாத்திரத்தை ஏற்றுள்ளார். மேலும் யோகி பாபு, ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜகன் ஆகியோரும் உள்ளனர். இது முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மென்ட் இப் படத்தைத் தயாரிக்கும் நிலையில், ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் 35 நாட்களில் முடித்துள்ளார் இயக்கு நர் கல்யாண். கடைசி நாள் படப்பிடிப்பின் போது சூர்யாவும் கலந்து கொண்டு வாழ்த்தினார். ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். விஜய் படத்தொகுப்பைத் கவனிக் கிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
ஜோதிகா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: பங்கேற்று வாழ்த்திய கணவர் சூர்யா
1 mins read
ஜோதிகா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூர்யா. -

