மன உளைச்ச­லில் நயன்தாரா

மன உளைச்ச­லில் நயன்தாரா

1 mins read
58dc1eca-a662-48ed-b106-b9e5b2bf10e1
விக்னேஷ் சிவனு­டன் நயன்தாரா -

ந­யன்தாரா, இயக்­குநர் விக்னேஷ் சிவன் காதல் ஜோடி­க­ளா­கத் திரையுலகில் வலம் வந்­து­கொண்­டிருக்­கின்ற­னர். ஓர் ஆண்டுக்கு முன்பே திருமணம் செய்துகொள்ளலாம் என்று விக்னேஷ் சிவன் கேட்டபோது அதைத்­ தள்ளிப்­ போட்­டார் நயன்தாரா. தொடர்ச்­சியாக வரும் பட வாய்ப்­புகளே அதற்­குக் காரணம். காதல் ஜோடி­க­ளாகவே தங்கள் உறவை 3 ஆண்டு­க­ளாக இரு­வரும் தொடர்ந்து வரு­கின்ற­னர். இந்நிலை­யில் விக்னேஷ் சிவ­னின் தாயார் இவர்கள் திரும­ணத்தை விரை­வில் நடத்தவேண்­டும் என்று ஆசைப்­படுகி­றார். விக்னேஷ் சிவ­னின் தாயார் மற்­றும் குடும்­பத்தினரை நயன்தாரா அடிக்கடி சந்­தித்து வந்தா­லும் திருமணம் பற்றி­ மூச்­சுவிட மறுக்­கி­றார். இந்த ஆண்­டில் திரும­ணத்தை நடத்திவிடலாம் என்று எண்ணிய நிலை­யில் நயன்தாரா இன்­னும் ஒன்றரை ஆண்­டிற்கு மேலாக தனது கால்‌ஷீட்டை புதிய படங்­க­ளுக்கு ஒதுக்­கித்­ தந்திருக்­கி­றார். இது விக்னேஷ் சிவ­னின் தாயாருக்கு ­வருத்தம் அளித்­திருக்­ கிறதாம். காதல் ஜோடி­க­ளாகவே காலத்தை கழிக்கலாம் என்று எண்ணி­வரும் நிலை­யில் திரும­ணத்துக்கு அதிகரித்து ­வரும் நெருக்­குதலால் நயன்தாரா மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்­கி­றார்.