ஐஸ்­வர்யா­வின் வேண்டுகோளால் நடிக்க ஒப்­புக்­கொண்ட 'மக்­கள் செல்­வன்'

1 mins read
c5fa53d8-8f4f-4a0e-9dd1-afebe87699cc
ஐஸ்­வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி -

'கனா' படத்­திற்குப்­ பிறகு ஐஸ்­வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்­கி­யத்துவம் உள்ள படங்­க­ளில் நடிக்க ஆர்வம் காட்டுகி­றார்.

அப்படி அவர் நடிக்க இருக்­கும் ஒரு படத்­தில் விஜய் சேதுபதி சிறப்பு வே­டத்­தில் நடித்­தால் நன்றாக இருக்­கும் என்று படத்­தின் இயக்­குநர் கேட்டுள்­ளார்.

ஆனால் விஜய் சேதுபதியோ அடுத்த 2 ஆண்டு­க­ளுக்­குத்­ தொடர்ந்து படங் க­ளில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்­கி­றார். எனவே

முத­லில் மறுத்து இருக்­கி­றார். பின்­னர் ஐஸ்­வர்யாவே விஜய் சேதுபதியிடம் கேட்க, மறுக்க முடியாமல் அக்டோபர் மாதத்­தில் 10 நாட்­க­ளுக்­குத்­ தேதி கொடுத்­துள்­ளார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியு­டன் 'சைரா', மலையா­ளத்­தில் ஜெயராம் நடிக்­கும் ஒரு படம் மற்­றும் திலீப்­ நடிக்­கும் ஒரு படத்­தில் ஒப்பந்தம் ஆகியிருக்­கி­றார்.

'சூப்பர் டீலக்ஸ்' படத்­திற்குப்­ பிறகு, 'சிந்­து­­பாத்­' வெளியாக இருக்­கிறது. தவிர, மணிகண்­டன் இயக்­கத் தில் ஒரு படம், சீனு ராமசாமி­யின் 'மா மனி­தன்', விஜய் சந்தர் இயக்­கத்­தில் ஒரு படம் ஆகிய படங்­க­ளில் தொடர்ந்து நடித்து ­வருகி­றார் 'மக்­கள் செல்­வன்' விஜய் சேதுபதி.